இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இணையத்தில் எண்ணிடங்காத வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவை நாம் அறியாத விலங்குகளின் வாழ்க்கையையும், பறவைகளின் வாழ்க்கையையும் எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றன. காதல் உணர்வு என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது உயிரினங்கள்  அனைத்திற்கும் உண்டானது. அந்த வகையில், பார்க்க மிக அழகிய தோற்றம் கொண்ட மயில், தனது காதலியை தன் பக்கம் ஈர்க்க ஆடும் ஆட்டம் இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்கள் மற்றும் பறவைகளின் வேட்டைகள், தாக்குதல்கள் வீடியோக்களை இணையத்தில் அதிகம் பார்த்திருப்போம். அதே சமயத்தில் மனதிற்கு இதமான விலங்குகளில் காதல் காட்சிகளும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அந்த வகையில் மயில்களின் காதலை விவரிக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவில் காணபடும் மயில், தனது காதலியை ஈர்க்க, அழகிய நடனம் ஆடி அசத்துகிறது. ஆனால், ஏனே, அந்த பெண் மயிலில் மனம் இரங்கவேயில்லை. அது காதல் கொள்ளும் மன நிலையில் இல்லை போலிருக்கிறது. இந்த வைரல் வீடியோ (Viral Video), Figen @TheFigen_ என்ற கணக்கில், X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பதிவிட்ட இரண்டு நாட்களிலேயே 12.1 மில்லியன் பார்வைகளை தாண்டிவிட்டது. ஆயிரக்கணக்கானோர் இதனை மறு பதிவிட்டு வருவதோடு, ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்


இணையத்தில் வைரலாகும் மயிலின் காதல் வீடியோவில் மயிலின் அற்புதமான ஆட்டத்தை காணலாம்:


 



 


இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கும் மயில்கள் மிகவும் கவர்ச்சியான பறவை என்றால் மிகையில்லை. தோகை விரித்து ஆடும் மயிலை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன. மயில்களில் ஆண் மயில் தனது அழகான தோகைக்காக பெயர் பெற்றது. பொதுவாக, ஆண் மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். இதன் தோகையில் வரிசையாக இருக்கும் 'கண்' போன்ற வடிவங்கள், தோகையை விரிக்கும் போது மிகவும் அழகாகத் தோற்றமளிக்கும்.


மேலும் படிக்க | நம்புங்க! இது அரச குடும்பத்தினரின் திருமணம் இல்லை... திருமண வீடியோ வைரல்


உலகின் மிக அழகான பறவைகளில் ஒன்று மயில், அதன் வண்ணம், விசிறி போன்ற வால், நீண்ட வடிவான இறகுகள், இணையைக் கவர அவைகள் ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் பிரம்மிக்க வைக்கின்றன. பெண் மயிலை கவர்வதைத் தவிர மழை வரும் முன்னரும் மயில்கள் தோகை விரித்து நடனமாடும். சில சமயங்களில் எதிரிகளை அச்சுறுத்தவும் தோகையை விரித்து, வேகமாக அசைத்து, ஒலி எழுப்பி பயமுறுத்தும். ஆங்கிலத்தில் மயிலின் பொதுப்பெயர் பீபௌல் (Peafowl) என்பதாகும். ஆண் மயிலினை பீக்காக் (peacock) என்றும், பெண் மயிலினை பீஹென் (peahen) என்றும் அழைக்கிறோம்.


வன விலங்குகள், பறவைகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில பார்ப்பவர்களுக்கு பீதியை ஊட்டுவதாகவும், சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். இணைய உலகில் பகிரப்படும் தகவல்கள் மூலம் பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன.  வனவிலங்கு வீடியோக்களைப் பொறுத்தவரை, அவற்றில் பெரும்பாலானவை வேட்டையாடும் காட்சிகள். 


மேலும் படிக்க | இந்த வயசிலயே இப்படியா? இணையத்தை அதிர வைத்த சூப்பர் டான்சர் பாட்டி வீடியோ வைரல்


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ