எரிமலை ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் நகரிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள  எரிமலை வெடித்தபோது, வானத்தில் மிகப்பெரிய தீ பிழம்புகள் விண்ணை தொடும் வகையில் இருந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரெய்காவிக்: ஐரோப்பாவின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஐஸ்லாந்தில் மக்கள் தொகை மிகக் குறைவு. இந்த நாட்டின் பெரும்பகுதி எப்போதும் பனியால் மூடப்பட்டிருக்கும், ஆனால் இந்த நாட்டில் சுமார் 32 எரிமலைகள் உள்ளன. அதில் எப்போது தீபிழப்புகள் எரிந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்தபோது, ​​உலகம் முழுவதும் அதை பார்த்து அதிர்ச்சியடைந்தது. ஏனென்றால், இந்த எரிமலையின் வாயிலிருந்து புகை அல்லது சாம்பல் எதுவும் வெளியே வரவில்லை, ஆனால் சிவப்பு  நிற தீ ஜவாலைகளுடன் எரிமலைக் குழம்பின் ஒரு வெள்ளம் வந்ததை போல் இருந்தது, வானம் சிவப்பு நிற தீப்பிழம்புகளின் ஒளியால் நிரம்பியது.



இந்த எரிமலை ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் நகரிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த எரிமலை வெடித்தபோது. ​​இந்த எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும் என்று ஏற்கனவே அச்சம் இருந்தது. ஆனால், அதன் தீவிரம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.


எரிமலை வெடிப்புக்குப் பிறகு, உள்ளூர் மக்கள் சமூக ஊடகங்களில் பல படங்களை பகிர்ந்து கொண்டனர், அதில் அதன் அழிவை தெளிவாகக் காணலாம். உள்ளூர் நிர்வாகமும் காவல்துறையினரும் மக்களை அந்த பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.இது வரை எரிமலை வெடிப்பினால் உயிர் அல்லது சொத்து இழப்பு குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. பாதுகாப்புப் பணியாளர்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை விமானங்களின் போக்குவரத்து எதுவும் நாட்டில் நிறுத்தப்படவில்லை.


ALSO READ | Air Force One விமானத்தில் ஏறுகையில், மூன்று முறை இடறி விழுந்தார் Joe Biden


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!



Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR