காதலியை மடியில் வைத்து பைக் ஓட்டிய இளைஞர்! காவல்துறை செய்துள்ள சம்பவம்!
Viral Video: ஒரு பெண்ணை தனது மடியில் அமர்ந்திருக்கும் படி பைக் ஓட்டிய இளைஞரை பெங்களூரு போலீசார் கண்டுபிடித்து தக்க தண்டை வழங்கி உள்ளனர்.
பெங்களூருவில் உள்ள தெருக்களில் ஒரு பெண்ணை தனது மடியில் உட்கார வைத்து, அவரது கைகளை கழுத்தில் சுற்றிக் கொண்டு பைக் ஓட்டிச் சென்ற இளைஞர் தற்போது கையும் களவுமாக சிக்கி உள்ளார். இவர்களை பைக்கின் நம்பர் பிளேட் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பைக்கில் மடியில் உட்கார வைத்து ஆபத்தான முறையில் பைக் ஓட்டிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவவே பெங்களூரு போலீசார் பைக்கில் சென்ற இருவரையும் தேடி பிடித்துள்ளனர்.
மேலும் படிக்க | Viral Video: பாசக்கார பய போலிருக்கு.... புறாவுக்காக வாயை கொடுத்த ‘பாரி’ வள்ளல்...!!
சரியான தேதி இல்லாத இந்த வீடியோவில், அந்த பெண் பைக் ஓட்டும் இளைஞரின் மடியில் ஒரு பக்கமாக அமர்ந்துள்ளார். அவரது கைகளை பைக் ஓட்டும் நபரின் கழுத்தில் சுற்றி உள்ளார். வடக்கு பெங்களூரில் உள்ள ஹெப்பல் மேம்பாலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரல் ஆனா நிலையில், பெங்களூரு போக்குவரத்து போலீசார் பைக்கின் நம்பர் பிளேட் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து பைக்கில் சென்ற இருவரையும் கண்டுபிடித்துள்ளனர். விசாரணையில் பைக் ஓட்டி நபர் பெங்களூரு ஷாம்புரா எம்வி லேஅவுட்டில் வசிக்கும் சிலம்பரசன் (21) என்பது தெரியவந்தது.
"பைக்கில் சாகசம் செய்த குற்றவாளியை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். விரைவில் அவர் இதற்கு முன்பு இதே போல வேறு ஏதேனும் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம்" என்று பெங்களூரு வடக்கு போக்குவரத்து டிசிபி தெரிவித்துள்ளார். சாகசம் செய்த இளைஞரின் பைக் பறிமுதல் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 279 (அதிகமாக அல்லது அலட்சியமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் பிரிவுகள் 184 (ஆபத்தான வாகனம் ஓட்டுதல்), 189 (பொது சாலையில் பந்தயம் அல்லது வேகமாக ஓட்டுதல்), 129 (இல்லை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் 177 போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாதது மற்றும் உங்கள் வாகனக் கட்டுப்பாட்டைத் தடுக்க யாரையாவது அனுமதிப்பது போன்ற பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பெங்களூரு விமான நிலைய சாலையில் ஸ்டண்ட் செய்ததற்காக பல இளைஞர்கள் பெங்களூரு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டனர். மேலும் இந்த இடத்தில் அதிக குற்றங்கள் நடைபெறுவதால் இந்த சாலையில் AI தொழில்நுட்பத்தில் இயக்கும் கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ