Viral News: என்னது மம்தா பேனர்ஜிக்கும் சோசலிசத்திற்கும் கல்யாணமா..!!
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியின் திருமண அழைப்பிதழ் இணையத்தை கலக்கி வருகிறது. அந்த திருமண அழைப்பிதழ் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியின் திருமண அழைப்பிதழ் இணையத்தை கலக்கி வருகிறது. அந்த திருமண அழைப்பிதழ் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி மம்தா பானர்ஜி என்ற மணமளுக்கும் ஏ.எம் சோசலிசம் என்ற மணமகனுக்கும் ஜூன் 13 அன்று திருமணம் நடைபெற உள்ளதாக, அந்த அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழின் புகைப்படம் வைரலாகிவிட்டது, திருமண அட்டை உண்மையானதா அல்லது போட்டோஷாப் செய்யப்பட்டதா என்று பலர் சந்தேகம் எழுப்பினர்.
இந்த அழைப்பு திங்களன்று வெளியிடப்பட்டு வைரலாகியதிலிருந்து, மணமகனின் தந்தை, ஏ மோகன் என பிரபலமாக அறியப்படும் லெனின் மோகனுக்கு, தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. தனது மகனின் திருமண அழைப்பிதழ் தான் உறுதிப்படுத்தினார். இவர் தமிழ்நாட்டின் (Tamilnadu) சேலத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாவட்ட செயலாளராக உள்ளார்.
ALSO READ | நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை; அதிரடி நடவடிக்கைக்கான காரணம் என்ன
"மணமகன் மற்றும் மணமகளின் பெயர்கள் ஏன் இப்படி உள்ளது என எல்லோரும் மிகவும் ஆர்வமாக கேட்டனர். அழைப்பிதழ் உண்மையானதா என்பதை அறிந்து கொள்ள, கட்சியின் சக உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து பலர் என்னை அழைத்தார்கள், எல்லோரும் ஒரே கேள்வியை கேட்பது மிகவும் எரிச்சலையும் கோபத்தையும் ஊட்டியது. ஆனால் பின்னர் அது பழக்கமாகிவிட்டது , ” என அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் விளக்கிய கோகன் அவர்கள், கட்டூர் கிராமத்தில் பெரும்பான்மையான மக்கள் கம்யூனிசத்தைப் பின்பற்றுபவர்கள். கோசலிசம், கம்யூனிஸம், லெனினிசம், ரஷ்யா, மாஸ்கோ, செக்கோஸ்லோவாக்கியா, ருமேனியா, வியட்நாம், வென்மணி போன்ற பெயர்கள் பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படும் பெயர்கள் என்றார்
திருமண அழைப்பிதழ் அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி, அமானி கொண்டலாம்பட்டி கிராமத்தில் உள்ள மணமகளின் வீட்டில் ஜூன் 13 அன்று திருமணம் நடைபெற உள்ளது.
ALSO READ | சர்வதேச அரங்கில் சிறகு விரிக்கும் “Koo"; நைஜீரியாவில் காலடி வைத்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR