What a Company! சீரியல் பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் நிறுவனம்! கேள்விப்பட்டதுண்டா?
ஒரு நிறுவனம் சீரியலை பார்ப்பதற்காக தனது ஊழியர்களுக்கு விடுமுறை கொடுக்கிறது! இது கற்பனையல்ல, உண்மையில் நடந்த சம்பவம். சாட்சி வேண்டுமா? இதோ டிவிட்டர் இருக்கிறது, அது சொல்கிறது இந்த உண்மையை!
பல விஷயங்களைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். இப்படியெல்லாம் நடக்குமா என்று வியப்பின் உச்சிக்கு செல்வோம். அப்படி ஒரு செய்தி தான் இது.
வேலைக்கு லீவு போட்டுவிட்டு, சினிமாவுக்கு செல்லும் ஊழியர்களும், அங்கு வந்த முதலாளியைப் பார்த்து நெளியும் காட்சியும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மன்னன் திரைப்படத்தில் பார்த்து ரசித்திருக்கலாம்.
இப்படித்தான் உலகம் இருக்கும், முதலாளிகள் இருப்பார்கள் என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு நிறுவனம் சீரியலை பார்ப்பதற்காக தனது ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பதை கேள்விப்பட்டிருக்கவே முடியாது. இது கற்பனையல்ல, உண்மையில் நடந்த சம்பவம். சாட்சி வேண்டுமா? இதோ டிவிட்டர் இருக்கிறது, இன்ஸ்டா இருக்கிறது பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
காலம் மாறிவிட்டது என்பதற்கு கட்டியம் கூறும் கதை இது. செப்டம்பர் 3-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது மனி ஹீஸ்ட் சீசன் 5 (Money Heist Season 5). அந்த வலைத்தொடரை பார்க்க பலரும் ஆவலாக இருக்கிறார்கள். முந்தைய சீசன்களும் சக்கைப்போடு போட்டன.
வெப் சீரிஸின் புதிய சீசனைப் பார்க்க தான் ஒரு ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. செப்டம்பர் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் Money Heist Season 5 சீரியலைப் பார்க்க ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிறுவனம் பணியாளர்களுக்கு விடுப்பு கொடுத்திருக்கிறது.
இது குறித்த நிறுவனத்தின் அறிக்கை, சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அதுமட்டுமல்ல, நெட்ஃபிக்ஸ் இல்லாதவர்களுக்கு சந்தாவும் கொடுக்கிறதாம் நிறுவனம்!
இப்படி ஒரு முதலாளி எனக்கு கிடைக்கமாட்டாரா? என நெட்டிசன்கள் ஆசைப்படும் அளவுக்கு இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
வெர்வ் லாஜிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் ஜெயின், என்ன சொல்கிறார் தெரியுமா? "அனைத்து ஊழியர்களும் கடந்த இரண்டு வருடங்களாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்க முடிவு செய்து, அலுவலகத்தில் ஒரு வெப் சீரிஸைக் காண்பிக்க நினைத்தோம்."
"ஆனால், அதைவிட அவர்களுக்கு ஒரு நாள் விடுப்பு கொடுத்து, அவர்களின் குடும்பத்துடன் சீரியலை பார்த்து மகிழ்ச்சியடையட்டும் என்று முடிவு செய்தோம். செப்டம்பர் 3 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் வெளியிடும் வலைத் தொடரைப் பார்க்க அனைவரும் ஆவலாக இருப்பார்கள் என்று தெரிந்தது. எனவே அன்று ஒரு நாள் விடுப்பு கொடுக்க நினைத்தோம். நெட்ஃபிக்ஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு சந்தா வழங்கவும் முடிவு செய்துள்ளோம். இந்த விஷயத்தை அறிவித்ததும், பணியாளர்கள் அனைவரும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர்" என்று ஜெயின் கூறினார்.
ALSO READ | டொமினோவின் nuts and bolts பீட்சா சாப்பிட்டதுண்டா? சாப்பிட்டவரின் எதிர்வினை இது
நிறுவனத்தின் கூற்றுப்படி, தீவிரமான வேலைக்கு நடுவில் ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குவது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிட உதவுகிறது, இது அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
சில சமயங்களில் வேலையில் திறமையை அதிகரிக்கவும் இதுபோன்ற குட்டி சந்தோசங்கள் தேவையாகத் தான் இருக்கிறது. எனவே, நிறுவனம் விடுமுறையை அறிவிக்கும் அறிவிப்பை வெளியிட்டது.
READ ALSO | திருமணத்தில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கு புதுமணத் தம்பதிகள் பில் அனுப்பிய வினோதம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR