Rain Dance by snakes! இது தமிழ்நாடு பாம்புகளின் உல்லாச மழை நடனம்!
மழையில் இரண்டு பாம்புகள் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இது பாம்புகளின் உல்லாச மழை நடனம் என்று கூறப்படுகிறது.
சென்னை: தமிழ்நாட்டின் தென்காசியில் படமாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ, காட்டில் இரண்டு பாம்புகள் ஒன்றாக நடனமாடுவதைக் காட்டுகிறது. மழையில் இரண்டு பாம்புகள் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இது பாம்புகளின் உல்லாச மழை நடனம் என்று கூறப்படுகிறது.
வனவிலங்குகள் அற்புதமான செயல்களைச் வெளிப்படுத்தும் வீடியோக்களை அவ்வப்போது பார்த்துக்கொண்டே இருக்கிறோம். கொடிய பாம்புகள் கூட தங்கள் விளையாட்டால் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
Zoho CEO ஸ்ரீதர் வேம்பு ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், இரண்டு மஞ்சள் நிற பாம்புகள் மழையில் நடனமாடுவதைக் காணலாம். இந்த வீடியோ தமிழகத்தின் தென்காசியில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேம்பு தனது ட்விட்டரில், “இன்று தென்காசியில் கனமழையின் போது நடந்த அற்புதமான பாம்பு நடனம் இது. நடைப்பயணத்திற்குச் செல்லும்போது இதை மொபைலில் படமாக்கிய @AksUnik க்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவில், பச்சை பசேலென தாவரங்களுக்கு இடையில் மஞ்சள் நிறத்தில் உள்ள பாம்புகள் நடனமாடுவதை பார்க்க முடிகிறது. அதில் ஒரு பாம்பு திரும்பும்போது, அதன் உடலில் கருப்பு நிறமும் தென்படுவது தெளிவாகத் தெரிகிறது.
பாம்பு நடனம், பார்ப்பவரை பரவசமாக்கினாலும், நேரில் பார்த்தால் பரவசம், பயமாக மாறிவிடும் என்பது என்னவோ உண்மை தான்.
ALSO READ | பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!
பாம்புகள் நடனமாடும் செய்திகளை அவ்வப்போது கேட்கிறோம், பார்க்கிறோம். பாம்புகள் எப்போது நடனமாடும்? எதற்காக நடனமாடும்? என்ற கேள்விகள் தோன்றுகிறதா? பாம்புகள் பொதுவாக இரண்டு நேரங்களில் நடனமாடும். இனச்சேர்க்கைக்காக பெண் பாம்புடன் ஆண் பாம்பு இணையும் போது இரண்டும் இணைந்து நடனமாடும்.
அடுத்து, பெண் பாம்புகளை கவரும் விதமாக ஆண்கள் நடனமாடுகின்றன. இந்த நடனம் 1 மணிநேரம் வரை நீடிக்கிறது. அண்மைக்காலமாக, பாம்புகளின் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அவை பகிரப்பட்டவுடனே அதிக பார்வைகளையும் பெறுகிறது. இந்தியாவில் 350 க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை விஷம் இல்லாதவை.
ALSO READ | ஒற்றை ரூபாய் செலவில்லாமல் விண்வெளிக்கு பயணிக்கும் தாயும் மகளும்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR