கொரோனா அலையின் தாக்கங்களையும் தாக்குப்பிடித்து இந்தியாவில் தொடரும் IPL 2021 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் எப்போதும் கொஞ்சம் மவுசு அதிகம் தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் (RCB) அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் கோஹ்லி நீல நிற ஜெர்சி (Blue jersey) அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது.



கொரோனா தொற்றுநோய் பரவி மக்களின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவித்திருக்கும் நிலையில், கொரோனா முன்களப் பணியாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உட்பட கொரோனா வாரியர்ஸ் அனைவருக்கும் நன்றியும் மரியாதையையும் காட்டும் முயற்சியை முன்னெடுப்பதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தெரிவித்துள்ளது.



இந்த ஐ.பி.எல் சீசனில் விளையாடும் போட்டிகளில் ஒன்றில் தங்கள் அணியினர்   புத்தம் புதிய நீல ஜெர்சி அணிந்து விளையாடுவார்கள் என்று ஆர்.சி.பி அறிவித்துள்ளது.


Also Read | ஒற்றை ஓவரில் 6 பவுண்டரிகளுடன் டெல்லி வெற்றி


கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் இப்படி அதிரடியாக அறிவிப்புகளை வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல, ரசிகர்கள் பசுமை இயக்கத்தை (green movement) ஆதரிப்பதற்காக பச்சை நிற ஜெர்சி (green jersey) அணிந்திருந்தது நினைவிருக்கலாம்.


ஆர்.சி.பி அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் நீல நிற ஜெர்சி அணிந்திருக்கும் கோஹ்லியின் புகைப்படத்தை வெளியிட்டது. “இந்த சீசனில் வரவிருக்கும் போட்டி ஒன்றில் ஒரு சிறப்பு ப்ளூ ஜெர்சியை ஆர்.சி.பி அணியினர் அணிந்து விளையாடுவார்கள். கடந்த ஓராண்டாக பிபிஇ கிட்களை (PPE kits) அணிந்து, மக்களுக்கு சேவை புரிந்த   அனைத்து முன்னணி களப் போராளிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்."  


இந்த ஐ.பி.எல் சீசனில் இதுவரை பெங்களூர் அணி முதல் இடத்தில் இருக்கிறது. ஏழு போட்டிகளுக்குப் பிறகு புள்ளிகள் அட்டவணையில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். கோஹ்லி தலைமையிலான அணி ஏற்கனவே ஐந்து போட்டிகளில் வென்றுள்ளது மற்றும் பிளேஆப் (playoff) போட்டிகளிலும் விளையாடும் நல்ல தகுதியில் இருக்கிறது.


Also Read | பின்னடையும் முன்னணி நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியல்


கோவிட் 19 இன் இரண்டாவது அலைகளின் கீழ் இந்தியா திணறி வரும் நிலையில், சில உயர்நிலை ஐபிஎல் வீரர்கள் ஏற்கனவே இந்த சீசனில்  போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர். சனிக்கிழமையன்று, இந்தியாவில் 3.92 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. சச்சின் டெண்டுல்கர், பாட் கம்மின்ஸ் மற்றும் பிற கிரிக்கெட் வீரர்கள் ஏற்கனவே இந்தியாவின் கோவிட் எதிர்ப்பு போராட்டத்திற்காக தாராளமாக நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.


இந்த நிலையில் ஆர்.சி.பி தங்களுடைய அடுத்த போட்டியில் நீல நிற சீருடை அணிய முடிவு செய்தால் போட்டி, கூலாக சுவாரஸ்யமாக இருக்கும்.


Also Read | Venkaboys: ராகுல் டிராவிட்டின் கோப அவதாரம், காரணம் இதுதான்…


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR