சென்னை: தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலின் கிளைமேக்ஸ் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் கட்சி தொடருமா? எதிர்கட்சி கோட்டை கொத்தளத்தை பிடிக்குமா என்பது மாபெரும் கேள்வி.
ஆனால் பிரம்ம்மாண்டமான கேள்விக்கான விடை இன்னும் சிறிது நேரத்தில் அறுதியிட்டு தெரிந்துவிடும் என்றாலும், சில பல துணைக் கேள்விகளும், பலரின் அரசியல் வாழ்க்கையையே புரட்டிப் போடும் முடிவுகளும் வந்துக் கொண்டிருக்கின்றன.
இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
Also Read | அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்!
நட்சத்திர வேட்பாளர்களும், முன்னாள்-இன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் அடுத்து என்ன என்ற அச்சத்தில், ஆவலில், திகிலில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
காட்பாடியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடவை சந்தித்துள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.ராமு முன்னிலையில் இருக்கிறார்.
கடலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.சி சம்பத் ஆறாவது சுற்றில் பின்தங்க, திமுக வேட்பாளர் முன்னேறியிருக்கிறார். நன்னிலம் தொகுதியில் அமைச்சர் காமராஜ் பின்தங்கியுள்ளார்.
Also Read | Election Result 2021: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவு
பிற நட்சத்திர வேட்பாளர்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவுக்கு பின்னடைவு, டிடிவி தினகருக்கும் பின்னடைவு. தினகரனை எதிர்த்து போட்டியிட்ட கடம்பூர் ராஜு முன்னிலையில் உள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னணி, பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைந்துள்ளார்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR