வெள்ளை புலி பாத்திருப்பீங்க... வெள்ளை சிங்கத்த பாத்திருக்கீங்களா? - வைரல் வீடியோ
White Lion Cub Viral Video : தாய் சிங்கத்துடன் சேட்டை செய்து திரியும் வெள்ளை சிங்கக்குட்டியின் வீடியோ வனத்துறை அதிகாரி வெளியிட்டிருந்த நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது.
White Lion Cub Viral Video : வன விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் காட்டும் வீடியோக்களைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. கூடவே, அந்த வீடியோவில் ஒரு அரிய விலங்கு இடம்பெற்றால் பார்ப்பவர்களுக்கு அது மிகுந்த உற்சாகத்தை அளிக்கும்.
அந்த வகையில், இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் நேற்று (டிச. 15) பகிர்ந்த வீடியோ பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அடிக்கடி வனவிலங்கு வீடியோக்களை ட்விட்டரில் பகிரும் இவர், ஒரு வெள்ளை சிங்கக் குட்டி (குருளை) தனது குடும்பத்துடன் காட்டில் உலா வரும் ஒரு சிறிய வீடியோவை நேற்று பகிர்ந்தார். அந்த பதிவில்,"இதோ உங்களுக்காக ஒரு வெள்ளை சிங்கக் குட்டி... உலகில் மூன்று வெள்ளை சிங்கங்கள் மட்டுமே காடுகளில் சுதந்திரமாக வாழ்கின்றன என்று நம்பப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
புதர்கள் மற்றும் பாறைகள் நிறைந்த காட்டுப் பாதையில் செல்லும்போது சிங்கம் ஒன்று கம்பீரமாக காட்டில் நடப்பதையும், அதன் குட்டிகள் அங்குமிங்கும் ஓடுவதையும் வீடியோவில் தெரிகிறது. குட்டிகளில் ஒன்று அபூர்வமான வெள்ளை இனமாகும். இது தனது தாயைப் பின்தொடர்ந்து தனது உடன்பிறந்தவைகளுடன் ஓடி விளையாடுவது வேடிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க | தெருவில் ஆடிய கோமாளிகளை தெறிக்கவிட்ட தெருநாய் வீடியோ வைரல்
இதற்கிடையில், பாதுகாப்பாக அந்த சிங்கம் ஒரு கணம் நின்று திரும்பிப் பார்க்கவும், அதன் குழந்தைகளைப் பரிசோதிக்கவும், மேலும் குட்டிகள் முன்னே செல்வதற்காக பொறுமையாக அந்த தாய் சிங்கம் காத்திருக்கிறது. அந்த தாய்க்கு மொத்தம் மூன்று குட்டிகள் என்றும், அதில் அந்த வெள்ளை குட்டியும் ஒன்று எனவும் தெரிகிறது.
பகிரப்பட்டதில் இருந்து, அந்த வீடியோ இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1400க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் குவித்துள்ளது. சமூக ஊடக பயனர்கள் சிங்கங்கள் சாதாரணமாக சிலிர்க்கும் அழகிய காட்சியை விரும்பி தங்கள் கருத்துக்களை கருத்துகள் பிரிவில் வெளிப்படுத்தினர்.
ஒரு பயனர், "இந்த குட்டிகளை கவனித்துக்கொண்டதற்கு நன்றி, வனத்துறையில் உள்ள உங்களைப் போன்ற அதிகாரிகளைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம், இது இந்தியாவுக்கே ஆச்சரியமாக இருக்கிறது" என்றார். மற்றொருவர், "பார்ப்பதற்கே அற்புதமாக உள்ளது! அவர்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என்று நம்புகிறேன். அது இந்தியாவில் இருந்தால், இருப்பிடத்தை வெளியிடாதீர்கள்!" என குறிப்பிட்டுள்ளார்.
குளோபல் ஒயிட் லயன் பாதுகாப்பு அறக்கட்டளையின்படி, வெள்ளை சிங்கங்கள் மற்றும் புலிகள் இரண்டும் மிகவும் அரிதானவை. அவற்றின் தோற்றத்திற்கு காரணம், மரபணுவில் இருக்கும் ஒரு பின்னடைவுதான் என கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில், குறிப்பாக கிரேட்டர் திம்பாவதி மற்றும் தெற்கு க்ரூகர் பார்க் பகுதியில் வெள்ளை சிங்கங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
மேலும் படிக்க | அந்த கடைசி வினாடி... பாக்காதீங்க, கண்டிப்பா பயந்துடுவீங்க: பதற வைக்கும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ