அந்த கடைசி வினாடி... பாக்காதீங்க, கண்டிப்பா பயந்துடுவீங்க: பதற வைக்கும் வைரல் வீடியோ

Crocodile Attack Video: மனதை திகிலடைய வைக்கும் முதலையின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இது காண்பவர்களை வியக்க வைக்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 15, 2022, 06:25 PM IST
  • முதலை தண்ணீரின் மிகவும் ஆபத்தான உயிரினமாகக் கருதப்படுகிறது.
  • அதன் பிடியில் மனிதர்களோ பிற விலங்குகளோ வந்துவிட்டால், அவர்கள் தப்பிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
  • இது சிங்கம் புலி போன்ற கொடிய மிருகங்களுக்கும் பொருந்தும்.
அந்த கடைசி வினாடி... பாக்காதீங்க, கண்டிப்பா பயந்துடுவீங்க: பதற வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

முதலை தண்ணீரின் மிகவும் ஆபத்தான உயிரினமாகக் கருதப்படுகிறது. அதன் பிடியில் மனிதர்களோ பிற விலங்குகளோ வந்துவிட்டால், அவர்கள் தப்பிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இது சிங்கம் புலி போன்ற கொடிய மிருகங்களுக்கும் பொருந்தும். முதலைகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. தண்ண்ணிரில் மட்டுமல்லாமல், தண்ணீருக்கு வெளியிலும் தாக்கும் திறன் அதற்கு உண்டு. 

தற்போதும் முதலையின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இது காண்பவர்களை வியக்க வைக்கிறது. இதில் அந்த நபர் முதலையின் வாயை பிரித்து அதில் தனது கையை வைக்க முயல்வதைக் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | குரங்குக்கு குசும்ப பாத்தீங்களா..சிங்கத்துகிட்ட வீண் வம்பு: வீடியோ வைரல் 

முதலையுடனான விளையாட்டு விபரீதமானது

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆற்றில் இருந்து முதலை ஒன்று வெளியே வந்துள்ளதை காண முடிகின்றது. அதன் அருகில் செல்லும் ஒரு நபர் அதன் வாயை பிரிப்பதையும் காண்கிறோம். சிறிது நேரம் கழித்து, ஒரு கையை வாயின் ஒரு பக்கத்தில் வைக்கும் அவர் மற்றொரு கையை விரிந்து இருக்கும் முதலையின் வாய்க்கு நடுவில் வைக்கிறார். ஆனால் அவர் கையை வைத்தவுடன், முதலை வேகமாக வாயை மூடுகிறது. வீடியோவில் இந்த காட்சியை பார்த்த உடனேயே நம் உடல் தானாக அச்சத்தால் அதிர்கிறது. 

திகிலூட்டும் முதலை வீடியோவை இங்கே காணலாம்: 

 

 

முதலை எத்தனை வேகமாக வாயை மூடியதோ, அதை விட வேகமாக அந்த நபர் தனது கையை எடுத்து விடுகிறார். நூலிழையில் அந்த நபர் தப்பித்து விடுகிறார். இன்னும் சிறிது நேரம் அவர் தாமதித்திருந்தால், அவர் கையை முதலை பதம் பார்த்திருக்கும். 

இந்த வீடியோ animals_powers என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள்  இதற்கு பல கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க | நாய்களிடம் மாட்டிய குட்டி, போராடி மீட்ட தாய் குரங்கு: அழ வைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News