மொகாலியில் நடைப்பெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவ் காயம் அடைந்ததால் கடைசி நொடியில் இவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


யார் இந்த வாஷிங்டன் சுந்தர்?


தமிழகத்தை சேர்ந்த 18-வயது ஆல்-ரவுண்டர், இளம் வயதிலேயே டோனியுடன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இணைந்து விளையாடிய பெருமை பெற்றவர்.


ரஞ்சி டிராபியில், அவர் 12 போட்டிகளில் விளையாடி 532 ரன்கள் எடுத்துள்ளார், சராசரியாக 31.29 புள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 


12 முதல் வகுப்பு விளையாட்டுகளில் விளையாடிய அவர் ஒரு சதமும், இரண்டு அரை சதங்களும் அடித்துள்ளார். 


இந்த 12 போட்டிகளில், சராசரியாக 26.93 புள்ளிகளில் 30 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் இரண்டு ஐந்து விக்கெட் செட் மற்றும் ஒரு பத்து விக்கெட் செட் என்பது குறிப்பிடத்தக்கது!


தமிழகத்தில் நடைப்பெற்ற TNPL கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் மற்றும் விக்கெட் எடுத்ததன் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது கவணத்தினையும் தன் பக்கம் ஈர்த்தவர். இதனால் இவர் இந்திய அணிக்கு பரிசீலிக்கப்பட்டார். ஆனால் "யோ-யோ" என்ற உடல்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததார். இதனால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. 


பின்னர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று கடுமையாக பயிற்சி மேற்கொண்டு "யோ-யோ" சோதனையில் வெற்றி பெற்றார், அதன் பிறகே இந்திய அணிக்கு தேர்வு ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இன்றைய போட்டிக்கு இவரை இந்திய கிரிக்கெட் அணியினர் சிறப்பாக வரவேற்றனர்!