Pakistan Cookery Show: போட்டிக்கு கடையிலிருந்து பிரியாணி வாங்கிய பெண்: கடுப்பான நடுவர்கள், வைரல் வீடியோ
Cookery Show Comedy Video: அடக்கடவுளே!! சமையல் போட்டியில் கலந்து கொள்ள கடையில் இருந்து பிரியாணி வாங்கிய பெண்: அடுத்து என்ன நடந்ததுனு பாருங்கள்!
வைரல் வீடியோ: பிரபல சமையல் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் ஒருவர் செய்த செயல் நடுவர்களையே கடுப்படைய செய்துள்ளது. இதன் வீடியோ வைரலாக பரவி வருகின்றது.
பொதுவாகவே சமையல் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் எப்போதுமே மவுசு உண்டு. பாகிஸ்தானில் உள்ள ஒரு பிரபல தொலைக்காட்சி சேனலில் ‘தி கிச்சன் மாஸ்டர்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண் நடுவர்களிடம் தான் பிரியாணி சமைத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு நடுவர்களோ நீங்கள் பிரியாணி சமைத்ததை ஒரு தட்டில் வைத்து தரலாமே அப்போதுதானே அதை மதிப்பிட முடியும் என்று கேட்டு இருக்கிறார்கள்.
மேலும் பிரியாணியில் என்னென்ன பொருட்களை சேர்த்தீர்கள் என்று கேட்டதற்கு ‘அதெல்லாம் சீக்ரட்டான பொருட்கள் (இன்கிரிடியன்ஸ்) சொல்ல முடியாது’ என்று கூறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த பெண் பொய் சொல்கிறார், அவர் அந்த பிரியாணியை சமைக்கவே இல்லை என்று புரிந்து கொண்ட நடுவர்கள், ‘போட்டியில் கலந்து கொள்ள உணவை சமைக்காமல் கடையிலிருந்து வாங்கி வருவதா?’ என்று கேட்டதற்கு, அந்தப் பெண் அசால்டாக போட்டிக்கு வரும்போது கடையிலிருந்து உணவை வாங்கி வரக்கூடாது என்ற விதியை நீங்கள் குறிப்பிடவில்லையே என்றும், இந்த பிரியாணியை நீண்ட வரிசையில் காத்திருந்து கஷ்டப்பட்டு தான் வாங்கியதாகவும் சொல்லி இருக்கிறார்
இப்படியாக போட்டியாளருக்கும் நடுவருக்கும் விவாதம் நீண்டு கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் கடுப்பான ஒரு நடுவர், ‘நீங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணோ ‘இந்த பிரியாணியை நீங்கள் ருசி பார்க்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்’ என்று அடம் பிடித்து இருக்கிறார். கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த நடுவர் கடுப்பாகி அந்த செட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இந்த சமையல் நிகழ்ச்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்து இருக்கோம், ஆனால் இங்க ஒரு குக்கே கோமாளித்தனம் பண்ணியிருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வைரலான வீடியோவுக்கு இணையவாசிகள் பல வேடிக்கையான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு இதுவரை சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் 1000-க்கும் மேலான ரீட்வீட்களும் 7000-க்கும் மேலான லைக்குகளும் கிடைத்துள்ளன.
மேலும் படிக்க | Hunt Video: அழகாய் இருக்கும் உலகம் ஒரு நொடியில் மரணக்கிணறாய் மாறும் சோகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ