இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியில் இந்திய வீரர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீன் 30-ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இடையே உலகக்கோப்பை லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. அன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வழக்கமான ஜெர்சியுடன் விளையாட போவதில்லை, அதற்கு பதிலாக இந்திய அணி ஆரஞ்சு நிறம் பெரும்பாலும் கொண்ட ஜெர்ஸியுடன் களமிறங்கும் என ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. 


இந்நிலையில் ICC-யின் புதிய விதிமுறைப்படி போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் ஒரே நிற உடையில் களம் இறங்க கூடாது. அதனால் போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து ஜெர்சியில் எந்த மாற்றமும் செய்து கொள்ள தேவையில்லை. அதனால், ஜீன் 30 ஆம் தேதி இங்கிலாந்துடன் மோதும் ஆட்டத்தில் இந்திய அணி தங்களது ஜெர்சியை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஜீன் 30-ஆம் தேதி இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஆரஞ்சு நிறம் பெரும்பாலும் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஜெர்ஸியுடன் களமிறங்கும். புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சியின் புகைப்படத்தை BCCI தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


புதிய ஜெர்ஸியுடன் இந்திய வீரர்கள் இருக்கும் புகைப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இதை வரவேற்றும் எதிர்த்தும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். லெக்ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் தனது தோற்றத்தை தொலைதூர ஜெர்சியில் வெளியிட்டார். "புதிய ஜெர்சியில் சத்தமிட தயாராக உள்ளது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.



ICCI வெள்ளிக்கிழமை அவே கிட்டை வெளிப்படுத்தியது,  #TeamIndia-வின் அவெர்ஸி ஜெர்சியை வழங்குதல், இந்த ஒருவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்? #TeamIndia # CWC19." என பதிவிட்டுள்ளனர். இந்த நிற ஜெர்ஸியின் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்கள் சிலர் நாடு எங்கே போகிறது? என்று கேட்டுள்ளனர். மற்றும் சிலர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடை போல உள்ளது என்று கிண்டலடித்துள்ளனர்.