டால்பின்களின் நீச்சல் போட்டி வீடியோ: நமது அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட சமூக ஊடகங்களில்பல வினோதமான விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். இணையத்தில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் உள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகும் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும்  கடல்வாழ் உயிரினங்களின் வித்தியாசமான வீடியோக்களுக்கு என தனி மவுசு உண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பார்ப்பவரை பதற வைக்கும் மிருகங்களின் வேட்டை வீடியோ அனைவரையும் இணையத்தை நோக்கி ஈர்க்கிறது என்றால், அழகிய விலங்குகளின் வீடியோக்கள் மனதை மயக்கி ஈர்க்கின்றன.


கடலில் இருக்கும் டால்பின்களை நாம் அருகில் சென்று பார்க்க முடியாது. அவற்றை பார்க்கவும் ரசிக்கவும், இணையதளம் ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. டால்பின்களின்  வைரலாகும் ஒரு வீடியோ அனைவரின் மனதையும் கவர்ந்து வைரலாவதற்கு காரணம் டால்பினிகளின் சீரான நீச்சலடிக்கும் லயம் தான்.  


மேலும் படிக்க | OMG Cat jump: நீளம் தாண்டுதல் போட்டியில் வைரப் பதக்கம் வெல்லுமா பூனை? வீடியோ வைரல்


டால்பின்கள் ஒன்றுடன் மற்றொன்று போட்டி போடுவதைப் போல இருக்கும் இந்த வீடியோவைபார்த்தால் மனம் மகிழ்கிறது. சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அழகிய கடலில், ஆழ்ந்து ரசித்து நீச்சலடிக்கும் டால்பின்களின் சுருதி லயம் தவறாத நீச்சல் கண்ணை கட்டிப் போடுகிறது.



விலங்குக்கும், மனிதனுக்கும் இடையில் உள்ள தொடர்பு என்றென்றும் தொடர்வது, அவற்றின் வாழ்க்கையும் அழகும் நம்முடன் இணைந்து இசைந்து செல்வது என்பதால், அனைவராலும் விரும்பி ரசிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | Tiger Video: சுருண்டு கிடக்கும் புலியை சீண்டினால் என்னவாகும்! வைரலாகும் புலிவேட்டை வீடியோ


இந்த வீடியோ கிளிப், தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வைரல் ஆகிறது. இந்த சிறிய கிளிப்பில், ஆர்ப்பரிக்கும் அலைகளுடன் கூடிய பரந்த நீலக் கடலில் டால்பின்கள் அழகாய் நீந்தி குதிப்பதைக் காணலாம். அழகிய ஓங்கில்கள் ஓங்கிக் குதிக்கும்போது, பார்க்கவே பரவசமாய் இருக்கிறது.


இந்த நீச்சல் போட்டியில் ஜெயிக்கும் டால்பினுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? அது எதுவாய் இருந்தாலும், மீன் பரிசு தான் அவற்றுக்கு விருப்பமாம். ஆனால், தங்க நிறத்தில் இருக்கும் மீன் மட்டுமே அவற்றுக்கு பரிசாக கொடுத்தால் பரவாயில்லை. வெள்ளி மீன், வெண்கல மீன் என பிற வகை மீன் பரிசுகள் அவற்றுக்கு உதவாதே! என்ன பரிசு கொடுக்க உத்தேசம்???


மேலும் படிக்க | 'ஆஹா...செம டேஸ்ட்': பாம்பை உயிரோடு சாப்பிட்ட நபர், ஷாக் ஆன நெட்டிசன்ஸ், வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ