மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் யோகிபாபு.. பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாக உள்ள ‘பொம்மை நாயகி’..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலா படத்தின் வெளியீடு முடிந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் (Pa Ranjith's Neelam Productions) ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா (Sarpatta Parambarai). இந்த படத்தில் ஆர்யாவோடு துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் 1980-களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் மார்ச் அல்லது ஏப்ரலில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.


ALSO READ | Arya 30: வேற லெவல் தோற்றத்தில் ஆர்யா - வெளியானது பா.ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில்..!


இந்நிலையில், பா.ரஞ்சித் (Pa Ranjith) தயாரிப்பில் உருவாக உள்ள அடுத்த படம் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில்., "இனிதே ஆரம்பம்!பெரும் மகிழ்ச்சி" என குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘பொம்மை நாயகி’ (Bommai Nayagi) என பெயர் சூட்டியுள்ளார். இந்த திரைப்படத்தில், யோகிபாபு (Yogi Babu) கதாநாயகனாக நடிக்க உளார். கோலமாவு கோகிலா, கூர்க்கா திரைப்படத்தை தொடர்ந்து பொம்மை நாயகி-யிலும் கதாநாயகனாக நடிக்க உள்ளார். 



கோலமாவு கோகிலா, கூர்க்கா-வை போன்றே இந்த திரைப்படத்திலும் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது தான் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் யோகி பாபு. இந்தப் படத்தை பா.இரஞ்சித்தின் 'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். இதில் யோகி பாபுவுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. இசையமைப்பாளராக சுந்தர மூர்த்தி, ஒளிப்பதிவாளராக அதிசயராஜ், எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குநராக ஜெயரகு ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR