பைக் சாகசத்தால் விபத்தில் சிக்கிய இளைஞர் - பதைபதைக்க வைக்கும் வீடியோ
இளைஞர் ஒருவர் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு கொடிய விபத்தில் சிக்கும் வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது.
உலகிலேயே சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் சாலை விபத்துகளில் சிக்கி, உடல் உறுப்புகளை இழக்கின்றனர். அவற்றில் பலர் உயிரிழப்பையும் சந்திக்கின்றனர். சாலை விதிகளை பின்பற்றாதது, கவனக்குறைவாக வாகனத்தை இயக்குவது உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணம். சாலையில் செல்பவர்கள் அனைவருமே சாலை விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். யார் ஒருவர் தவறு செய்தாலும், அப்பாவியாக எதிரில் வருபவர்களின் உயிரையும், அவர்களின் இழப்புக்கு குடும்பத்தையும் பெரிதும் பாதிக்கும்.
மேலும் படிக்க | சிறப்புத் திறன் கொண்ட நாய்களின் சிறப்பான செயல்கள்! வைரல் வீடியோ
குறிப்பாக, அதிவேக பைக்குகளில் பயணிக்கும் இளைஞர்கள் சிலர் சாகசங்கள் செய்வதற்காக சில விபரீத முயற்சிகளில் இறங்குகின்றனர். கைகளை விட்டுவிட்டு பைக் ஓட்டுவது, வாகனங்கள் மீது ஏறி நின்று பைக்கை இயக்குவது உள்ளிட்ட விபரீத முயற்சிகளை செய்கின்றனர். சிலர் இன்ஸ்டாகிராமில் ரீலஸ் போடுவதற்காக நெரிசல் மிக்க சாலைகளில் அதிவேகமாக வாகனத்தை இயக்குகின்றனர். இப்படி, வாகனத்தை இயக்கிய இளைஞர் ஒருவர் தான் மிகக் கொடிய விபத்தில் சிக்கியுள்ளார்.