பலரது மன அழுத்தத்தையும் நொடிபொழுதில் நீக்கி மனதை இலகுவாக்கி முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்க செய்யும் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. மனித இனத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு சாதனைகளை புரிகிறார்களோ அதேபோல சிறப்பு திறன் கொண்ட நாய்களும் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்துகின்றன. தற்போது காட்டு பகுதியில் சிறப்பு திறன் கொண்ட நாய்களின் குழு உடலில் சக்கர நாற்காலிகளை கட்டிக்கொண்டு சுற்றிவரும் காட்சி பார்ப்பதற்கு அற்புதமாக காட்சியளிக்கிறது. அமெரிக்காவில் உள்ள வெர்மான்ட்டில் இருந்து டிரேசி ஃபாவ்லர் சில சிறப்பு திறன் கொண்ட நாய்களை தத்தெடுத்துள்ளார், அந்த நாய்களின் வீடியோ தான் இங்கு பலராலும் ரசிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | காட்டு ராஜாவுக்கு கிளாஸ் எடுத்த எருமைகள், பல்பு வாங்கிய சிங்கங்கள்: வைரல் வீடியோ
டிரேசியின் குடும்பத்தில் தற்போது எட்டு உறுப்பினர்கள் உள்ளனர், அவர் செல்லமாக வளர்த்து வந்த நாய் இறந்த பிறகு சிறப்பு திறன் கொண்ட நாய்களை தத்தெடுக்க தொடங்கினார். இப்போது அவர் பல நாய்களை தத்தெடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ட்விட்டரில் ஃப்ரெட் ஸ்கல்ட்ஸ் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், சிறப்பு திறன் கொண்ட நாய்கள் தங்கள் உடலில் சக்கர நாற்காலிகளை பொருத்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் ஓடுவதைக் காணலாம். அதில் பல நாய்கள் பக்கவாதத்தால் அல்லது மூட்டு இழப்பால் அவதிப்படுவதைக் காணலாம், ஆனால் சக்கர நாற்காலிகளால் நாய்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது.
They took it off road…nothing can stop them. pic.twitter.com/dNsM1CeUuE
— Fred Schultz (@FredSchultz35) April 21, 2022
இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவானது இதுவரை 187,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் பத்தொன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் சிறப்பு திறன் கொண்ட நாய்களை பாராட்டுவதோடு, நாய்களை தத்தெடுத்து வளர்க்கும் டிரேசியையும் பாராட்டி வருகின்றனர்.
Her name is Tracey Fowler. Give her a follow on Facebook. pic.twitter.com/Xp8pt3oxE2
— Fred Schultz (@FredSchultz35) April 21, 2022
மேலும் படிக்க | குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் குடிமகனின் வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR