உணவு சமைப்பதற்கான காய்கறிகளில் மிக முக்கியமாக இருப்பதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய உணவு வகைகளிலும் தென்னிந்திய உணவு வகைகளான குழம்பில் இருந்து ரசம், கூட்டு, தக்காளி சாதம் என்று சமையலில் எங்கு பார்த்தாலும் தக்காளி இல்லையென்றால் சமையலே இல்லை எனும் அளவிற்கு தக்காளி உள்ளது. அப்படிபட்ட தக்காளியின் விலை தற்போது திடீர் என்று கிடு கிடுவென உயர்ந்து கிலோ 120 வரை ஆகி பொதுமக்களை திணற வைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் தொடர் மழை காரணத்தால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதுவே தக்காளி விலை உயர்வுக்கு காரணமாகும். இதனால் பொதுமக்கள் தக்காளியை வாங்க பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தக்காளி விலை உச்சத்திற்கு சென்றதால் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. 


மேலும் படிக்க | திருமண பரிசாக வழங்கப்பட்ட தக்காளி மற்றும் விறகடுப்பு!


இந்நிலையில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்துள்ள பெருமாகவுண்டம்பட்டி இளம்பிள்ளை, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.