ரேஸ் போக நினைத்தவரின் பைக் புதரில் பாய்ந்த சோகம்; வைரல் வீடியோ
சாகசம் செய்ய நினைத்தவர் பைக்குடன் புதரில் சென்று விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பைக்கில் சாகசம் செய்வது என்பது டிரெண்ட் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கைகளை விட்டு வண்டி ஓட்டுவது, ஓடிக் கொண்டிருக்கும் வண்டி மீது ஏறி நிற்பது, படுத்துக் கொள்வது உள்ளிட்ட பல நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சாகசங்களை எல்லாம் செய்து அதனை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். முன்பெல்லாம் அது ஒரு சாகசம், வித்தைக்காரன் என்ற மாய படத்துக்காக செய்தவர்கள், இப்போது யூ டியூப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வரும் பணத்துக்காக இத்தகைய விபரீத முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
மேலும் படிக்க | சிங்கங்களுக்கு மத்தியில் சிக்கித் தவித்த முதலை, அடுத்து என்னாச்சி: வீடியோ வைரல்
காவல்துறை எச்சரித்தாலும், அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எடுத்துக் கூறினாலும் கேட்பதில்லை. வாகனங்களில் சாகசம் செய்பவர்களில் பலர் மிக மிக மோசமான விபத்துகளை சந்தித்திருக்கின்றனர். உயிரை இழந்தவர்கள் ஏராளம், கை கால்கள் இழந்து வாழ்க்கையை மிகவும் கடினமாக கடத்திக் கொண்டிருப்பவர்களை எல்லாம் நேரில் பார்த்தால் தான் அதனுடைய விபரீதம் புரியும். இருப்பினும் கல்லூரி நண்பர்கள் உள்ளிட்டோரின் உந்துதலால் ஈர்க்கப்பட்டு விபரீத முயற்சிகளை எடுக்கின்றனர். இப்போது வைரலாகியிருக்கும் வீயோவிலும் ரேஸ் செய்ய இளைஞர் ஒருவர் முயற்சி செய்து புதரில் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், பைக் வைத்துக் கொண்டு ரெடியாக இருக்கும் நபர், வாகனங்கள் இல்லாதபோது சாகசம் செய்யலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார். வாகனம் ஏதும் வராததை உறுதி செய்து கொண்ட அவர், ரேஸை தொடங்குகிறார். ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு பைக் ஒத்துழைக்கவில்லை அல்லது அவரால் கன்ட்ரோல் செய்ய முடியவில்லை. முடிவில் சிறிது தூரம் சென்று சாலையின் அந்த பக்கம் இருக்கும் புதரில் பைக்கோடு விழுகிறார். வீடியோவை பார்த்த சிலருக்கு சிரிப்பு வந்தாலும், இப்படி விபரீத முயற்சிகளை செய்ய வேண்டாம் என பலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | நாகப்பாம்பை கடித்து குதறும் கீரி: நடுங்க வைக்கும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ