ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இயங்கும் YSR காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ‘ராவாலி ஜெகன், காவாலி ஜெகன்’ என்னும் பாடல் யூடியூப்-ல் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக சாதனை படைத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் தற்போது நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜெகன் மோகன் ரெட்டி தலைமைலான YSR காங்கிரஸ் கட்சி ‘ராவாலி ஜெகன், காவாலி ஜெகன்’ என்னும் பாடலை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் வெளியான நாள் முதல் இதுவரை 11 மில்லியல் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. அரசியல் பிரச்சார பாடல்களில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் இதுதான் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Indian Political Action Committee (I-PAC) என்னும் யூடியூப் சேனலில் கடந்த மார்ச் 8-ஆம் நாள் வெளியாகியுள்ள இந்த பாடல் ஆந்திரா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக YSR காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.



ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணத்தை காட்சி படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாடல் ஆனது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், இந்த வீடியோ பதிவுகளானது ஜெகன் மோகன் ரெட்டியின் 3,648 கிமி பிரஜ சனவகல்பா யாத்ரா-வினை கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றது. ஜெகன் மோகன் ரெட்டியின் வீடியோ பதிவுகளுடன் அவரது தந்தை ராஜசேகர ரெட்டி அவர்களின் 2003-04 ஆண்டு அரசியல் யாத்திரையும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.


இந்த வீடியோ ஆனது ஆந்திராவில் வாழும் மக்களின் நிலைமை, அவர்கள் படும் துயரம், மக்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியீட்டின் போது இந்த பாடல் ஆனது கடைநிலையில் இருக்கும் மக்களையும் சென்றடையும் என YSR காங்கிரஸ் கட்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.