கொரோனா வைரஸ் வெடிப்பு பெரும்பாலான விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்தியுள்ள நிலையில், வீரர்கள் பலரும் சமூக இடைவெளி மற்றும் சுய தனிமைப்படுத்தலில் பயிற்சி பெற்று வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தனது பெருங்களிப்பினை டிக்டோக் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகிறார். மேலும் தனது வேடிக்கையான பதிவுகள் மூலம் அவர் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.


COVID-19-க்கு எதிரான போராட்டத்திற்காக 80 லட்சம் நிதி அளித்த ரோஹித் சர்மா..!


அந்த வகையில் வியாழக்கிழமை (ஜூன் 18) சுழற்பந்து வீச்சாளர் வேடிக்கையான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த பதிவினை அவர் வேடிக்கையானதாக மாற்ற இந்திய கிரிக்கெட் அணியின் துணை தலைவர் ரோகித் ஷர்மாவின் புகைப்படத்தினை பயன்படுத்தியுள்ளார். 



ஆம், இந்த புகைப்படத்தில் ரோகித் ஷர்மாவை பெண்ணாக உருமாற்றி சாஹல் பதிவிட்டுள்ளார். இந்திய பேட்ஸ்மேனை ட்ரோல் செய்வதற்காக சாஹல் ட்விட்டரில் பதிவிட்ட இந்த பதிவு இணையவாசிகளை பெரிதும் கவர்ந்தது. 


இந்த பதிவிற்கு அவர் தலைப்பிடுகையில்., "மிகவும் அழகாக இருக்கிறார் அல்லவா... ஆம் நீங்கள் பார்ப்பது ரோகித் ஷர்மா..." என குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் IPL தொடரின் 13-வது பதிப்பு மேலதிக அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சமீபத்தில் அறிவித்தது.


T20 கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் IPL இரண்டிலும் விளையாட விரும்புகிறேன்: ரோஹித் சர்மா...


இந்த ஆண்டு IPL-ன் தொடக்க ஆட்டம் IPL - நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஆகியவற்றுக்கு இடையே மார்ச் 29 அன்று மும்பையில் உள்ள சின்னமான வான்கடே மைதானத்தில் நடைபெற இருந்தது. எனினும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்ட நிலையில் விளையாட்டு வீரர்கள் தற்போது இவ்வாறான வேடிக்கை செயல்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.