தென் கொரியாவின் அதிபராக இருந்த போது பார்க் குன்-ஹே, தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி கடும் ஊழல் செய்தார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவம் தென் கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னால் அதிபர் பார்க் குன்-ஹே மீது கடும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. தென் கொரியாவுக்கு புதிய அதிபரும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் பார்க் குன்-ஹே மீதானா ஊழல் குற்றச்சாட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.


இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், பார்க் குன்-ஹே ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டது நிருப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு  24 வருட சிறைத்தண்டனையும், 17 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி கிம் சே-யோன்.


ஆனால் நீதிபதி தீர்ப்பு அளிக்கும் போது முன்னால் அதிபர் பார்க் குன்-ஹே நீதிமன்றத்துக்கு வரவில்லை. மேலும் தனது மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த பார்க் குன்-ஹே, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.