ராணுவ கண்காட்சி திடலில், சிறப்பு மருத்துவ முகாம்!
தமிழ்நாடு அரசின் சார்பாக 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வகையில் 12 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் சார்பாக சர்வதேச ராணுவ கண்காட்சி ஏப்ரல் 11 துவங்கி வரும் 14-ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் பல்வேறு இயதிய மற்றும் வெளிநாட்டு ராணுவ தடவாள நிறுவனங்கள் பங்குபெற்றுள்ளன.
இக்கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வகையில் 12 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, இருதயம், நரம்பியல் மற்றும் மயக்கியவியல் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 8 நடமாடும் மருத்துவமனைகள், 24 இலவச அவசர சிகிச்சை ஊர்திகள், 108 ஆம்புலன்ஸ்கள் அவரச சிகிச்சைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிகிச்சைக்காக இம்முகாமில் சிறப்பு மருயதுகள் மற்றம் நெபுலைசர்கள், அதிநவீன செயற்கை சுவாச கருவிகள், இருதய உதறல் நீக்கி போன்ற மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் இம்மருத்துவ முகாம்களை பார்வையிட்டு பேசியதாவது,
"இந்திய அரசினால் அமைக்கப்பட்டுள்ள இந்த ராணுவ கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள இச்சிறப்பு மருத்துவ முகாம்களில் எல்லாவிதமான அவரச மருத்துவ நிலைமையயை சமாளிக்கும் வகையில் 110 சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஏப்ரல் 14ம் தேதி கண்காட்சியினை காண சுமார் 3 இலட்சம் பொதுமக்கள் வருகை எதிர்பார்க்கப்படுவதால் மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். மேலும் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடயத 3 நாட்களில் இம்முhகம்களில் 726 நபர்கள் பயனடையதுள்ளனர். என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியின் போது ஊரக தொழில் துறை அமைச்சர் திரு பா. பெஞ்சமின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு. குழயதைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு. இன்பசேகரன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.