தமிழக அரசின் சார்பில் மகளிருக்கான இலவச திறனாய்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), கிண்டியில் உடனடி வேலை வாய்ப்பிற்கான இலவச பயிற்சியில் சேர 27.06.2018 வரை www.skilltraining.tn.gov.in என்கிற இத்தொழிற் பயிற்சி நிலையத்தில் கீழ்கண்ட தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். மேலும் பயிற்சி பெறும் அனைவருக்கும்


  • விலையில்லா மடிக்கணினி

  • மிதிவண்டி

  • பாடப்புத்தகங்கள்

  • வரைபட கருவிகள்

  • இலவச பேருந்து பயணச்சலுகை

  • சீருடைகள்

  • காலணிகள்

  • மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படுகிறது.


அளிக்கப்படும் பயிற்சி விவரங்கள்.


  1. கம்மியர் கருவிகள் - 26 இருக்கைகள் - பயிற்சி காலம்: 2yrs - கல்வி தகுதி: 10-ஆம் வகுப்பு.

  2. தகவல் தொழிற்நுட்பம் - 26 இருக்கைகள் - பயிற்சி காலம்: 2yrs - கல்வி தகுதி: 10-ஆம் வகுப்பு.

  3. சுருக்கெழுத்து - 52 இருக்கைகள் - பயிற்சி காலம்: 1yr - கல்வி தகுதி: 10-ஆம் வகுப்பு.

  4. தையல் வேலை - 126 இருக்கைகள் - பயிற்சி காலம்: 2yrs - கல்வி தகுதி: 10-ஆம் வகுப்பு.

  5. அலங்கார பூத்தையல் தொழிற்நுட்பம் - 42 இருக்கைகள் - பயிற்சி காலம்: 1yr - கல்வி தகுதி: 10-ஆம் வகுப்பு.

  6. கணினி உதவியுடன் கூடிய பூத்தையல் - 21 இருக்கைகள் - பயிற்சி காலம்: 1yr - கல்வி தகுதி: 10-ஆம் வகுப்பு.

  7. நவீன ஆடை வடிவமைத்தல் - 84 இருக்கைகள் - பயிற்சி காலம்: 1yr - கல்வி தகுதி: 10-ஆம் வகுப்பு.


இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.