சனி பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை: வேத ஜோதிடத்தில், ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப சனி பகவான் பலன்களைக் கொடுப்பார். இதனால் தான் சனிபக்கவானை நீதியின் கடவுள் என்று அழைக்கிறோம். அந்த வகையில் இந்த திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 17, 2023 அன்று, சனி கும்ப ராசியில் பெயர்ச்சியானார். சனி 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசிக்கு பிரவேசித்துள்ளார். மேலும் தற்போது மார்ச் 29, 2025 வரை சனி கும்ப ராசியில் தான் இருப்பார். இதன் போது 3 ராசிகள் மட்டும் மிகுந்த வேதனையையும் இழப்பையும் சந்திக்க நேரிடும். எனவே, இந்த ராசிக்காரர்கள் எவை என்பதை பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த 3 ராசிக்காரர்களும் 2025 வரை கவனமாக இருக்க வேண்டும்


கும்ப ராசி: கும்ப ராசியில் சனி இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின்  இரண்டாம் கட்டம் நடக்கிறது. 2025 வரை கடுமையாக உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. மேலும், உறவுகளில் மோசமான விளைவு ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை உண்டாகும்.


மேலும் படிக்க | பணவரத்து இருந்தாலும் எப்போதும் கையில் பணம் இல்லாமல் தவிக்கும் ராசிகள் 


மகர ராசி: 2025-ம் ஆண்டுக்குள் மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியின் மூன்றாவது மற்றும் கடைசி கட்டத்தை எதிர்கொள்வார்கள். இதனால் 2025 ஆம் ஆண்டு வரை இவர்களுக்கு வலிமிகுந்ததாக இருந்தாலும், பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். மேலும், ஆரோக்கியத்திலும் அக்கறை காட்ட வேண்டும்.


மீன ராசி: 2025-ஆம் ஆண்டு வரை மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனிதொடரும். இந்த நேரம் இந்த ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். நிதி சிக்கல்கள் இருக்கலாம். வாழ்க்கை துணையுடனான உறவில் விரிசல் ஏற்படலாம்.


சனிப் பரிகாரங்கள்:


- ஒவ்வொரு சனிக்கிழமையும் சனிபகவானுக்கு கடுகு எண்ணெய் சமர்பிக்கவும்.
- ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் ஆல மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்.
- சனி தோஷம் குறைய இரும்பு பொருட்கள், கருப்பு ஆடைகள், கருப்பு உளுத்தம் பருப்பு, கடுகு எண்ணெய், காலணிகள் போன்றவற்றை சனிக்கிழமையில் தானம் செய்யுங்கள்.
- சனிக்கிழமையன்று மீன்களுக்கு, பறவைகளுக்கு உணவளிக்கவும். இது ஜாதகத்தில் சனியின் தாக்கத்தை குறைக்க உதவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) 


மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - பணமழையில் நனையப்போகும் ராசிகள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ