மார்ச் மாதம் சனி உதயம், இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கன்ஃபார்ம்

Shani Uday 2023: வேத ஜோதிட சாஸ்திரப்படி மார்ச் 06 ஆம் தேதி சனி கும்பத்தில் உதயமாகுவார். சனியின் உதயத்தால் சில ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். சனியின் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 6, 2023, 12:21 PM IST
  • மார்ச் 06 ஆம் தேதி சனி உதயம்.
  • சில ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்.
  • சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மார்ச் மாதம் சனி உதயம், இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கன்ஃபார்ம் title=

Shani Uday 2023: வேத ஜோதிடத்தில் சனி கிரகம் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. அதேபோல் சனியின் உதயம் மற்றும் அஸ்தமனம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு கிரகம் அஸ்தமனம் ஆவது சுபமாக கருதப்படுவதில்லை. அஸ்தமன கிரகங்கள் சில ராசிகளுக்கு எதிர்மறை பலனைத் தரும். அந்த வகையில் சனி கிரகம் ஜனவரி 31 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமனமாகியுள்ளார். இப்போது வருகிற மார்ச் 6 ஆம் தேதி கும்பத்தில் உதயமாகி சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தருவார்.

இந்த நிலையில் மார்ச் 6, 2023 அன்று, சனி மீண்டும் கும்பத்தில் உதயமாக உள்ள நிலையில் சில ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். அதே நேரத்தில், சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் நல்ல நாட்களை தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | வார ராசிபலன்: சில ராசிகளுக்கு பண விரயம்... சில ராசிகளுக்கு பண வரவு..!

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள் மற்றும் தடைபட்ட வேலைகள் விரைவாக முடிவடையும். அதேபோல் உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் மற்றும் இந்த கிரகம் சனியின் நண்பன் என்பதால் இவரை வழிபடுவது நன்மை உண்டாகும். ஸ்படிக மாலையை கழுத்தில் அணிவது மங்களகரம் உண்டாகும்.

சிம்ம ராசி: ஜோதிட சாஸ்திரப்படி சனியின் உதயம் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் செல்வச் செழிப்பை உண்டாக்கும். கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். பண விஷயத்தில் நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் கவலைகள் சற்று அதிகரிக்கலாம்.

துலாம் ராசி: சனியின் உதயம் துலாம் ராசிக்காரர்களுக்கும் சுபமே. தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பணியிடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உங்கள் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் மற்றும் கடின உழைப்பின் முழு பலன்களைப் பெறுவீர்கள். சனி பகவானை வழிபடுங்கள்.

கும்ப ராசி: இந்த நேரத்தில் நீங்கள் புதிய நண்பர்களை உருவாக்க முடியும். இருப்பினும் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். உங்கள் செலவுகளும் அதிகரிக்கலாம். இருப்பினும், தடைபட்ட பணிகள் கண்டிப்பாக முடிக்கப்படும். இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் பின்னர் பலன்களைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மேஷத்தில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பம்பர் ஜாக்பாட் லாபம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News