சூரிய கிரகணத்தால் சவால்களை சந்திக்கப்போகும் 4 ராசிகள் இவை தான்
இந்த ஆண்டிலேயே இரண்டாவது சூரிய கிரகணம் நடக்கப்போவதால், சில ராசிகளுக்கு சிக்கலான காலம் இருக்கப்போகிறது. அவர்கள் அதற்கு முன்னெச்சரிக்கையாக தயாராக இருக்க வேண்டும்.
சூரிய கிரகணம்-சந்திர கிரகணம் என்பது ஒரு வானியல் நிகழ்வு என்றாலும், அவை இந்தியாவில் ஜோதிட சாஸ்திர முறைப்படி அணுகப்படுகிறது. இதன் மூலம் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் சாதகபாதகங்களை கணித்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். அந்த வகையில் இந்த ஆண்டில் அடுத்த சூரிய கிரகணம் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமாகவும் இருக்கப்போவதால், அதனால் எந்தெந்த ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
இரண்டாவது சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 14, சனிக்கிழமையன்று நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் வளைய சூரிய கிரகணமாக இருக்கும். அதாவது சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. அதன் காரணமாக சூரியன் வளையம் போல் தோன்றும். இது ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. மறுபுறம், சூரிய கிரகணம் தெரியும் இடங்களில் ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க | வக்ர சனியால் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... அமர்க்களமாய் வாழ்வார்கள்!!
சூரிய கிரகணத்தின் தாக்கம்
இந்த ஆண்டின் அடுத்த சூரிய கிரகணம் இந்தியாவில் காணப்படாது. எனவே அதன் சூதக் காலமும் செல்லுபடியாகாது. ஆனால் இந்த சூரிய கிரகணம் ராசிகளை பாதிக்கும். இந்த சூரிய கிரகணம் மிதுனம், சிம்மம், கடகம், கும்பம், மகரம், மீனம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதாரணமான அல்லது சிறப்பான பலன்களைத் தரும். அதே சமயம், 4 ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேஷம் -
சூரிய கிரகணம் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களைத் தரும். உங்கள் நெருங்கியவர்கள் உங்களை ஏமாற்றலாம். உத்தியோகத்தில் பிரச்சனை வரலாம். சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
ரிஷபம் -
இந்த சூரிய கிரகணத்தால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். பணியிடத்தில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடலாம்.
கன்னி -
சூரிய கிரகணம் கன்னி ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கவனமாக இருக்க வேண்டும்.
துலாம் -
சூரிய கிரகணத்தின் தாக்கத்தால், துலாம் ராசிக்காரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எரிச்சல் அதிகரிக்கலாம். கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ