சூரிய கிரகணத்தின் விளைவு: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த கிரகணம் மதியம் 12.29 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை என்றாலும் அதன் தாக்கம் சில ராசிகளில் தெரியும். அதேபோல் சூரிய கிரகண நாளில் உருவாகும் சுப யோகம் சிலரின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். எனவே சூரிய கிரகண நாளான இன்று சர்வார்த்த சித்தி, பிரீதி யோகம் போன்ற சுப யோகங்கள் உருவாகிறது. அதன்படி இந்த நேரத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் சுப பலன் தரும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரிய கிரகணத்தால் ராசியில் எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தும்


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் அனுகூலமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வேலையில் ஆதாயம் அடைவார்கள். உங்கள் பணி பாராட்டப்படும். மரியாதை அதிகரிக்கும். சிக்கிய பணம் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். முன்னேற்றம் கிடைக்கும்.


மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: மீனம், கும்ப ராசிக்கார்களுக்கு அதிர்ஷ்டம்... மகரத்துக்கு சோகம்..!


கடகம்: சூரிய கிரகணத்தின் தாக்கம் சுபமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் குடும்பத்தினருடனும் நெருங்கியவர்களுடனும் உறவுகள் சிறப்பாக இருக்கும். ஆளுமையின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கும். வெளிநாடு பயணம் செல்லலாம். புதிய தொடர்புகளால் நன்மைகள் உண்டாகும்.


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் இன்பமான பலன்களைத் தரும். உங்கள் செயல்திறன் மேம்படும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உயர் பதவி, கௌரவம் பெறலாம். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். சமயப் பணிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.


தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் பதவி உயர்வு தரும். குழுத் தலைவர் பொறுப்பைப் பெறலாம். சம்பளம் உயரும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் பெறலாம். அரசின் திட்டங்களின் பலன் கிடைக்கும். பொருளாதார ஆதாயம் உண்டாகும்.


கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் நல்ல பலனைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தீர்த்த யாத்திரை செல்லலாம். உடல் உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அமாவாசை அன்று இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.. வீட்டில் மகிழ்ச்சியும் நிலவும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ