மனைவியை ராணி பாேல் பார்த்துக்கொள்ளும் 5 ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?
5 Zodiac Signs That Will Make The Best Husbands : ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள், தங்களின் மனைவியை ராணி போல பார்த்துக்கொள்வார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா?
5 Zodiac Signs That Will Make The Best Husbands : ஜோதிடத்தின் படி, ஒரு சில ரசிகளில் பிறந்த ஆண்கள், வசீகரிக்கும் குணம் மற்றும் மனம் படைத்தவர்களாக இருப்பார்களாம். இவர்கள் உண்மை, நேர்மை, புரிந்துணர்வு உள்ளிட்ட தன்மைகளை கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். அது மட்டுமல்ல, தனக்கென்று வந்திருக்கும் வாழ்க்கை துணையை கையில் வைத்து கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளவும் இவர்கள் துணிவார்களாம். அப்படி, நல்ல கணவன்மார்களாக திகழும் ராசிகள் குறித்து பார்ப்போம்.
1.ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள், தங்கள் வாழ்க்கை துணைக்கு மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்களாம். எதையும் நடைமுறையில் பார்க்க தெரிந்த இவர்கள், தங்கள் உறவில் எது சரிவரும் எது சரிவராது என்பதை எடுத்து கூறுபவர்களாக இருப்பார்களாம். மேலும், பொறுமைசாலியாக இருக்கும் இவர்கள், சண்டை ஏற்பட்டாலும் அதனை முழுமையாக புரிந்து அதை சரிசெய்ய முயற்சி செய்வார்களாம். நன்றாக காதலிக்க தெரிந்த இவர்கள், உறவுகளின் அருமை புரிந்தவர்களாகவும் இருப்பார்களாம்.
2.கடகம்:
கடக ராசியை சேர்ந்த ஆண்கள் சிலர் பிறரது வலியையும் புரிந்து கொள்பவர்களாக இருப்பார்களாம். இயற்கையாகவே இவர்களிடம் பிறர் மீது அக்கறை உணர்வு இருப்பதால் இவர்களது துணையும் இவர்களிடம் பாதுகாப்பாக உணர்வார்களாம். இவர்கள், குடும்பத்தையும் உறவுகளையும் முதன்மை படுத்துபவர்களாக இருப்பார்களாம். ஒரு விஷயத்தை தனது துணை கூற வருவதற்கு முன்பே புரிந்து கொள்ளும் தன்மையும் இவர்களிடம் உள்ளது. இதனால், இவர்களுக்கு மனைவியாக வருபவர்கள், எந்த விஷயத்தையும் மறைக்க வேண்டிய, பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
3.கன்னி:
கன்னி ராசியை சேர்ந்த கணவன்மார்கள் எந்த விஷயத்தையும் ஆழ்ந்து யோசித்து அதை நடைமுறையோடு தொடர்பு படுத்தி முடிவெடுக்க கூடியவர்களாக இருப்பார்களாம். ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனிக்கும் இவர்கள் தனது துணைக்கு என்ன பிரச்சனை என்றாலும் அதை அவர்களை பார்த்தவுடன் புரிந்து கொள்கின்றனர். அதே போல, ஒரு உறவில் நேர்மை, மதிப்பு ஆகியவற்றை முன்னிருத்தும் இவர்கள் அதை தக்க வைத்துக்கொள்ள அதற்கேற்ற முயற்சிகளையும் எடுக்கின்றனர்.
மேலும் படிக்க | மாறுகிறது சனி திசை! டிசம்பர் 27 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் தோஷம் நீங்கும்!
4.மகரம்:
மகர ராசிக்காரர்கள் மிகவும் பொறுப்பான கணவனாக நடந்து கொள்வார்களாம். தங்களின் உறவையும் குடும்பத்தையும் பாதுகாக்க, நிதி நிலைமையை தக்க வைக்க கடினமாக உழைக்கும் இவர்கள், நேர்மையானவர்களாகவும் இருக்கின்றனர். ஒழுக்கம், விஸ்வாசம், உறவில் இருக்கும் பகிர்வு ஆகியவற்றிற்கு இவர்கள் மதிப்பு கொடுப்பவர்களாக இருக்கின்றனர். எந்த விதமான சவால்களையும் பொறுமையாக உடைத்துக்கொண்டு வெளிவரும் இவர்களின் திறன், உறவில் வரும் சண்டைகளை கூட எதிர்கொள்ள உதவுகிறது.
5.மீனம்:
மீன ராசியை கொண்டவர்கள் தனக்கும் பிறருக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். பிறரை நன்கு புரிந்து கொள்ளும் திறன் உடையவர்களாக இருக்கும் இவர்கள், காதல் அல்லது திருமண வாழ்க்கை என்று வந்துவிட்டால் அதனை தற்காத்துக்கொள்வதில் வல்லவர்களாக இருக்கின்றனர். எந்த சூழலுக்கும் ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளும் இவர்கள், தனது துணையின் மனநிலைக்கு ஏற்றவாறும் தன்னை மாற்றிக்கொள்ள தயங்காதவர்கள். எனவே, இவர்களும் சிறந்த கணவனாக தகுதியுடையவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ