அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆகியவை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாள். இந்த ஆண்டின் ஆடி அமாவாசை வரும் 16ம் தேதி புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தித்தி வருகிறது. ஆடி மாதத்தில் முதல் நாள் ஆடி 1 ஆம் தேதி (ஜூலை - 17ம் தேதி) அன்று அமாவாசை வந்தது. அதே போன்று, ஆடி 31 ஆம் தேதி (ஆகஸ்ட் -16ம் தேதி) அன்று இரண்டாவது அமாவாசை வருகிறது. இப்படியான சூழலில் எப்போதும் இரண்டாவது அமாவாசையையே நாம் ஆடி அமாவாசையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என ஆன்மீக வல்லுநர்கள் கூறுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அமாவாசை அன்று அனைத்து முன்னோர்களையும் நினைவு கூற வேண்டும். இதனால் பித்ரு தோஷம் அனைத்தும் நீங்கி, குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். நமது தலைமுறைகள் சுகமாய் நிம்மதியாய் இருக்க தர்ப்பணம் கொடுக்க வேண்டியது முக்கியம்.  புனித நீர் நிலைகளுக்கு, அதாவது கடல் அல்லது ஆறுகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து, அவர்களது ஆசியை பெற தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.


பித்ருக்களுக்கு பூஜை செய்து, அந்தணர்களுக்கு அரிசி பருப்பு போன்ற தானியங்களையும், பூசணிக்காய், வாழைக்காய், போன்ற காய்கறிகளையும் தானம் கொடுப்பது சிறப்பு. பின்னர் வீட்டில் இருக்கும் முன்னோர் படங்களுக்கு மாலை அணிவித்து, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்கி, அதை காக்கைக்கு வைத்து பிறகே சாப்பிட வேண்டும்.


மேலும் படிக்க | அட்டகாசமான வாழ்க்கை, ராஜயோகம்: குரு வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்!!


நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அமாவாசை நாளில் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். இதனால் சகல வித நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் அன்னதானம் கொடுப்பது சிறப்பு. அமாவாசை நாளில் உணவின்றி தவிப்பவர்கள்,ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். இதனால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.


அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வதால் வாழ்வில், தோஷங்கள் விலகி,  பிரச்சனைகள் நீங்கும். புதிய ஆடைகளை தானம் செய்வதால் ஆயுள் விருத்தி உண்டாகும். நீண்ட நாட்களாக வட்டி வரும் நோய்கள் நீஞ்கும். மேலும், கண்டாதி தோஷம் விலகும். உங்கள் பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும். பசு தானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பித்ருசாப தோஷங்கள் விலகும். எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வதால் பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.


அமாவாசை தினத்தில் எறும்பு, காகம், நாய், பூனை, பசு மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் ஒரு சேர கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.


நமது வாழ்வில் வரும்  இன்பங்கள், இன்னல்கள் யாவும் நாம் எமது முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப  அமைகிறது. அதில் பித்ருக்களுக்கான காரியமும் ஒன்றாகும். எனவே, முன்னோர்களின் ஆசிகளை முழுமையாக பெற சிரத்தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும். அதில் தவறினால் பித்ருக்களின், அதாவது முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | அள்ளிக்கொடுக்கப்போகும் சனி.. பணத்தை வாரிக்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ