12 ஆண்டுக்குப் பின் புதன்-குருவின் அபூர்வ நிகழ்வு.. இந்த ராசிகளுக்கு பொற்காலம்
வேத சாஸ்திரங்களின் படி, மீனத்தில் வியாழன் மற்றும் புதன் இணைவதால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும்.
புதன் மற்றும் குரு சேர்க்கையின் பலன்கள்: ஜோதிடத்தின்படி, ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு, கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைகின்றன. இந்த சேர்க்கை மனித வாழ்விலும் பூமியிலும் பலவிதமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். தற்போது வியாழன் / குரு மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார், மறுபுறம் மார்ச் மாத தொடக்கத்தில் புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடைவார். இதன் காரணமாக மேஷ ராசியில் வியாழன் மற்றும் புதன் இணைவு உருவாகும். இதன் பலன் எல்லா ராசிக்காரர்களுக்கும் தெரியும். ஆனால் வியாழன் மற்றும் புதனின் சிறப்புப் பாக்கியம் இருக்கும் 3 ராசிகள் உள்ளன. இந்த ராசிகள் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெறலாம். இந்நிலையில் இந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...
மேஷம் (Aries Zodiac Sign):
புதன் மற்றும் வியாழனின் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கலாம். ஏனெனில் உங்கள் ராசிக்கு அதிபதி வீட்டில் இந்த சேர்க்கை அமையப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்கள் மனம் மதச் செயல்களில் அதிகமாக ஈடுபடும். உங்களின் பணி நடையும் மேம்படும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய நபர்களுடன் உறவுகளை உருவாக்குவீர்கள். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனளிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். தொழில் ரீதியாக இந்த நேரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும், புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இந்த நேரத்தில், அதிர்ஷ்டமும் உங்கள் பக்கத்தில் இருக்கும்.
தனுசு (Sagittarius Zodiac Sign):
புதன் மற்றும் வியாழன் சேர்க்கை தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கலாம். ஏனெனில் இந்த தற்செயல் நிகழ்வு உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் நிகழப் போகிறது. தனுசு ராசியின் அதிபதி வியாழன் கிரகம். எனவே, இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் மற்றும் பணியிடத்தில் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும். காதல் உறவில் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு திருமணம் நடந்து முடியும்.
மீனம் (Pisces Zodiac Sign):
புதன் மற்றும் வியாழன் சேர்க்கை மீன ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இந்த சேர்க்கை உங்கள் ராசியில் பணம் மற்றும் பேச்சு சம்பந்தமாக இடத்தில் நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பாராத பண வரவை அவ்வப்போது பெறலாம். நிலுவையில் உள்ள பணத்தையும் திரும்பிப் பெறலாம். உங்கள் தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும் மற்றும் பணம் தொடர்பான உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். மேலும், ஊடகம், சந்தைப்படுத்தல், தகவல் தொடர்பு மற்றும் பேச்சுத் துறையுடன் தொடர்புடைய தொழில் மற்றும் வேலையில் உள்ள மீன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். வியாழனின் தாக்கத்தால் உங்களின் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ