Sun Transit 2024 : ரவி யோகம் மற்றும் சித்தி யோகத்தால் பயனடையும் ராசிகள்! தை சங்கராந்தி ராசிபலன்

Sun Transit 2024 in 15th January : ரவி யோகம் மற்றும் சித்தி யோகத்தால் பயனடையும் ராசிகளில் அதிக பலனடையும் ராசிகள் நான்கு. அவை, ரிஷபம், துலாம், மிதுனம், விருச்சிகம் ஆகும். இந்த நான்கு ராசிகளின் பொங்கல் சங்கராந்தி பலன்களை பார்க்கலாம்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 9, 2024, 05:54 PM IST
  • மகரத்தில் மாறும் சூரியன்
  • தை மாத ராசிபலன்
  • 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் சூரிய பகவான்
Sun Transit 2024 : ரவி யோகம் மற்றும் சித்தி யோகத்தால் பயனடையும் ராசிகள்! தை சங்கராந்தி ராசிபலன் title=

Ravi & Siddhi Yogas by Sun Transit 2024 : மகர சங்கராந்தி இந்தியாவில் மிக முக்கியமானதாக கொண்டாடப்படுகிறது. இதற்கு காரணம், உத்தராயணம் என்பது சூரியனின் வடக்கு நோக்கி நகரும் மாற்றமாகும்.  சூரியன் தனது திசையை மாற்றி நகர்வதால், மனிதர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் நடக்கின்றன.  

மகர சங்கராந்தியின் முக்கியத்துவம்

மகர சங்கராந்தி என்பது பண்டிகையாக கொண்டாடப்பட்டாலும், அதன் முக்கியத்துவம் சூரியனின் திசை மாற்றம் ஆகும். சூரியன் ஒவ்வொரு முறை ராசி மாறும்போதும், கிரகத்தின் இயக்க மாற்றத்தை சங்கராந்தி என்று அழைக்கிறோம். மகர சங்கராந்தி என்பது விவசாயிகளுக்கு முக்கியமான பண்டிகையின் தொடக்கமாக அமைகிறது. அறுவடைத் திருநாளாக இருந்தாலும், ஜோதிட உலகிலும் மகர சங்கராந்தி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பொங்கல் கொண்டாட்டம் என்பது தை மாத பிறப்பாக தமிழ் புத்தாண்டின் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் இரவில் சங்கராந்தியை வழி அனுப்பும் நடைமுறைகள் கிராமங்களில் உண்டு. பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு  ஜனவரி 15, 2024 அன்று மகர சங்கராந்தி வருகிறது. இந்த சங்கராந்தியில், ரவி யோகம், சித்தி யோகம் என இரண்டு சுப யோகங்கள் உருவாகி 4 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும்.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்... வெற்றிகள் குவியும்

ரவி யோகம் மற்றும் சித்தி யோகத்தால் பயனடையும் ராசிகளில் அதிக பலனடையும் ராசிகள் நான்கு. அவை, ரிஷபம், துலாம், மிதுனம், விருச்சிகம் ஆகும். இந்த நான்கு ராசிகளின் பொங்கல் சங்கராந்தி பலன்களை பார்க்கலாம்.
 
ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக பலன்களைத் தரும் இந்த சூரியப் பெயர்ச்சி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள், இந்த சங்கராந்தியன்று வெள்ளை எள்ளை தானம் செய்தால் சூரியனின் அருள் அதிகமாகக் கிடைக்கும்.
 
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் இருக்கும், இவை உங்களுக்கு பெரிய பலன்களைத் தரும். நிலுவையில் இருந்த பண பாக்கி திரும்ப வரும்.பொருளாதார நிலை மேம்படும். சூரியபகவானுக்கு செய்யும் பூஜைகள் நல்ல பலன்களைத் தரும். நிம்மதியான வாழ்க்கையை தை மாதன் உங்களுக்குத் தரும்.

மேலும் படிக்க | ஜனவரி முதல் வாரம் எப்படி இருக்கும்... மேஷம் முதல் மீனம் வரையிலான வார பலன்கள்!
 
துலாம்

துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல நாட்கள் தொடங்கும். பணம் கிடைக்கும். பதவி, கௌரவம், செல்வாக்கு அதிகரிக்கும். சில நல்ல செய்திகளைப் பெறலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். துலாம் ராசிக்காரர்கள், உணவு பொருட்களை தானம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். ஆரோக்கியமான உணவுகளை உண்டால், நோய் நொடி அண்டாது.
 
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலையில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெறத் தொடங்கும். பொருளாதார நிலை சாதாரணமாகவே இருக்கும். வெல்லம் அல்லது வெல்லத்தால் செய்யப்பட்ட பொருட்களை தானம் செய்தால், பண பலன்கள் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ராகு கேது நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 2024 ஆரம்பமே அதிரடி... ராஜயோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News