Mangal Gochar 2024, Mangal Shani Yuti: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் தளபதியாக செவ்வாய் கருதப்படுகிறார். இவர் தன்னம்பிக்கை, வீரம், தைரியம், வலிமை, விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ஆசைக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இந்நிலையில் வருகிற மார்ச் 15 ஆம் தேதி மாலை 05:45 மணி அளவில் சனியின் திரிகோண ராசியான கும்ப ராசியில் பெயரச்சி அடையப் போகிறார். அப்படிப்பட்ட நிலையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய் மற்றும் சனியின் சேர்க்கை நடக்கப்போகிறது. செவ்வாய் சனி சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு சிறந்த பலன் கிடைக்கப் போகிறது. மேலும் இந்த சேர்க்கை மார்ச் 15 முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை காலை 08:52 மணி வரை இருக்கும். எனவே செவ்வாய் மற்றும் சனி இணைவால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிகாரம், பதவி உயர்வு போன்ற நற்பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சனியின் சேர்க்கையால் சுப பலன் உண்டாகும். இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் பலனளிக்கும், அதனுடன் இந்த நேரத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணவரவு உண்டாகும். திடீர் நிதி ஆதாயம் பெறுவீர்கள். இது தவிர குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறலாம். தொழிலில் லாபம் பெறுவீர்கள். தன்னம்பிக்கை, தைரியம் உத்வேகம் ஆகியவை அதிகரிக்கும்.


மேலும் படிக்க | திருமணம் ஆகாத பெண்கள் புதன்கிழமை தலைக்கு குளிக்க கூடாது! ஏன் தெரியுமா?


தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் சிறப்பான பலன் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், வேலை தேடுபவர்களுக்கு நினைத்தப் படி வேலை கிடைப்பதுடன் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு மிகவும் சாதகமான நேரமாக இருக்கும். வெளிநாடு சென்று உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். முதலீடு மூலம் லாபத்தை பெறுவீர்கள். சுற்றுலாவிற்கு வெளிநாடு பயணம் மேற்கொள்ளலாம். அதிர்ஷ்டம் கூடும், படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். 


கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையால் சுப பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்களால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை பெறலாம். நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றியுடம் முடிவடைந்து பொருளாதார நிலை மேம்படும். புதிய வருமான ஆதாரங்களையும் காணலாம். பல வித புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். 


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இன்னும் 8 நாட்களில் சனி உதயம்: இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, பொற்காலம் ஆரம்பம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ