இன்னும் 48 மணி நேரத்தில் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம் ஆரம்பம், ஜாக்கிரதை
Venus Transit 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் பெயர்ச்சியாகும் போதெல்லாம், அதன் சுப மற்றும் அசுப பலன்கள் ஒரு நபரின் வாழ்க்கையில் தென்படும். அந்த வகையில் ஏப்ரல் 6 ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். இதனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக நடக்க வேண்டும் என்பது அறிந்துக்கொள்ளுங்கள்.
சுக்கிரன் பெயர்ச்சி 2023 விளைவு: பொதுவாக சுக்கிரன் பொதுவாக பொருள் வசதி, பெருமை, புகழ் போன்றவை தருபவர் ஆவார். இந்து மதத்தின் படி, சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த கிரகம் ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய இரண்டு ராசிகளின் அதிபதியாவார். அந்த வகையில் சுக்கிரன் கிரகம் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி அன்று 2023 அன்று காலை 10:50 மணிக்கு ரிஷப ராசியில் இடப் பெயர்ச்சி அடைவார். சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிகளுக்கும் அசுப பலனை ஏற்படுத்தி தரும்.
சுக்கிரனின் பொது குணம்
ஜோதிடத்தின் படி, சுக்கிரன் சிறப்பாக அமைந்திருந்தால் பொருள் வசதிகள், திருமண வாழ்க்கை, ஆற்றல், அழகு மற்றும் காதல் விவகாரங்களில் இனிமை போன்றவை தரும். ரிஷபம் மற்றும் துலாம் ராசி அதிபதியான சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்றும். கன்னி ராசியில் நீச்சம் பெறுவார்.
சுக்கிர பகவானுக்கு புதன், சனி, ராகு, கேது ஆகியவை நட்பு கிரகங்களாகவும், சூரியன், சந்திரன் செவ்வாய் ஆகியவை பகை கிரகங்களாகும். ஒவ்வொரு ராசியிலும் சுமார் 23 நாட்கள் சஞ்சரிக்கும்.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - அதிஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்!
மீன ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்
வேத ஜோதிட சாஸ்திரப்படி ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி செய்வதால், மீன ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இந்த ராசிக்கு மூன்றாவது மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் என்றும், இப்போது இந்த ராசியின் மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் போது மீன ராசிக்காரர்களுக்கு வேலை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஜோதிட சாஸ்திரப்படி, மீன ராசிக்காரர்கள் பதவி உயர்வில் தடைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில், வேலையில் அலட்சியம் காணப்படும். இது மட்டுமின்றி, இந்த நேரத்தில் நீங்கள் வேலையை மாற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம் அல்லது வியாபாரம் மந்தமாக நடக்கலாம்.
சுக்கிரன் மோசமான நிலையில் இருந்தால்
சுக்கிரன் மோசமான நிலையில் அமர்ந்திருந்தால், வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில அமைப்புகளால் வறுமைக்கு வழிவகுக்கும்.
மோசமாக அமைந்த சுக்கிரனால், திருமண வாழ்க்கையில் பிளவு ஏற்படலாம். குழந்தை பேற்றுக்கான திறன் குறையும். ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைவதால் சிறுநீரகம் மற்றும் கண் தொடர்பான நோய்கள் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ