வீட்டில் செடிகளை நடுவதால் பல நன்மைகள் உள்ளன.  துளசி, தாமரை போன்ற செடிகளை வீட்டில் நட்டால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுவதோடு, காற்றின் தரம் நன்றாக இருக்கும். வீட்டிற்கு அழகு சேர்க்கும் செடிகளால், மனதிற்கு மகிழ்ச்சியும் ஏற்படும். ஆனால், சில செடிகள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும்  தரித்திரத்தையும் கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள செடிகளையும் மரங்களையும் மறந்தும் கூட வீட்டில் வைக்காதீர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டில் வைக்கக் கூடாத சில  செடிகள்:


புளிய மரம்


புளியஞ்செடியை ஒருபோதும் வீட்டில் நடக்கூடாது. வீட்டைச் சுற்றி புளிச் செடியை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தில் சிறந்ததாக கருதப்படுவதில்லை. இது உங்கள் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மேலும், குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி நோய் வாய்ப்படலாம்.


பேரிச்ச மரம்


பேரிச்சம்பழம் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இருப்பினும், அதன் செடியை ஒருபோதும் தவறுதலாக வீட்டின் முற்றத்தில் நடக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தில், இந்த செடியை வீட்டில் நடுவது அசுபமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்களின்  கடன் சுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


எலுமிச்சை அல்லது நெல்லிக்காய் மரம்


எலுமிச்சை அல்லது நெல்லிக்காய் மரத்தை வீட்டின் உள்ளேயோ அல்லது பிரதான கதவுக்கு முன்பாகவோ நடக்கூடாது. ஏனெனில் முட்கள் உள்ள செடிகள் வீட்டில் முரண்பாடுகளை ஏற்படுத்தும். இதனால், வீட்டில் பதற்றமான சூழல் நிலவி, பரஸ்பர கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த செடிகளை வீட்டில் நடுவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.


கருவேல மரம்


கருவேல மரத்தை வீட்டில் அல்லது அருகில் நடக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தில் இது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. இந்த மரம் இருந்தால், வீட்டில் சந்தோஷம் இருக்காது என்பதோடு தரித்திரமும் ஏற்படலாம். இந்த செடியினால் வீட்டில் சண்டை, சச்சரவுகள் தொடங்கும், வீட்டில் உள்ளவர்களுக்கு மனநோயும் ஏற்படும்.


பருத்தி செடி


வீட்டில் பருத்தி அல்லது பட்டு பருத்தி செடிகளை நடக்கூடாது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை உண்டாக்கி, வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தையும் வறுமையையும் கொண்டு வருகிறது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.


மேலும் படிக்க | பிப்ரவரி ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு மகாலட்சுமியின் பரிப்பூரண அருள் நிச்சயம்!


மருதாணி செடி


மருதாணி செடியில், தீய சக்திகள் வசிப்பதாக நம்பப்படுகிறது. இந்த செடி வீட்டிற்கு அருகில்  இருந்தால், வீட்டில் அமைதியும் சந்தோஷமும் இருக்காது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.


காயந்த மரம்


வாஸ்து சாஸ்திரத்தின் படி காய்ந்த செடிகளை வீட்டில் வைக்கக்கூடாது. ஏனெனில் அவை எதிர்மறை ஆற்றலை கடத்துகின்றன. அதனால் வாழ்க்கையில் துன்பங்களும் பிரச்சனைகளும் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் நடப்பட்ட செடி  காய்ந்தால், அதை உடனடியாக அகற்ற வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது).


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ