கிரகங்கள் மற்றும் விண்மீன்கள் நிலைகளில் மாற்றம் வரும் போது, அவை நம் வாழ்வில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. சுக்கிரன் கிரகம் சமீபத்தில் சிம்ம ராசிக்கு மாறிய நிலையில், செப்டம்பர் மாதத்தில் மீண்டும் ராசியை மாற்ற உள்ளது. இம்முறை சுக்கிரன் கன்னி ராசியில் புதனுடன் இணையும் நிலையில், இதனால், லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது. இதனால், சில ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் அவர்கள் குபேர யோகத்தை அனுபவிப்பார்கள். குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்பு ஆகியவை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த 4 ராசிக்கார்ரகளுக்கான விரிவான ராசிபலனை இங்கு காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்ரன் - புதன் இணைவினால் சுப பலன்களை பெறப்போகும் 4 ராசிகள்:


மிதுனம்: 


சுக்கிரன் கன்னி ராசியில் புதனுடன் இணையும் நிலையில், மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எல்லா வகையிலும் வெற்றி வந்து சேரும். அவர்களது குடும்ப உறவு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். லாபம் அதிகரிக்கும். பத்திரிக்கை, எழுத்து, ஆலோசனை, நடிப்பு, இயக்கம் அல்லது ஆங்கரிங் போன்றவற்றில் தொடர்புடையவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் லாபத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.


கடகம்: 


கடக ராசிக்காரர்களுக்கு சுக்ரனின் பெயர்ச்சி அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களை ஈர்ப்பதில் உங்கள் ஆளுமை வெற்றிகரமாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய வேலை அல்லது புதிய தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்றால், அதற்கு இதுவே சிறந்த நேரம். இந்த நேரத்தில் தொழில் மற்றும் பணியிடத்தில் அதிகப்படியான லாபமும் வெற்றியும் கிடைக்கும். நீங்கள் தொடங்கும், அனைத்து தொழில்களிலும், செய்யும் பணிகளிலும் வெற்றி கிடைக்கும். 


மேலும் படிக்க | சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’ கிரகம் வலுவாக இருக்க சில பரிகாரங்கள்


சிம்மம்:


புதனின் இந்த ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல காலத்தை கொண்டு வந்துள்ளது. தொழில், வியாபாரத்தில் புதிய சாதனைகளை அடையலாம். அவர்களின் தன்னம்பிக்கை பல விஷயங்களில் வெற்றியைத் தரும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். சிம்ம ராசிக்காரர்களுக்கு பூர்வீக நிலம் மற்றும் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். 


கன்னி: 


புதன் தனது சொந்த ராசியான கன்னியில் சஞ்சரிப்பது வணிக ரீதியாக மிகவும் சாதகமான பலன்களைத் தரும். அவர்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். நோய்வாய்ப்பட்டவர்களின் ஆரோக்கியம் மேம்படும். கன்னி ராசியில் புதன் சஞ்சாரம் செய்யும் போது இவர்களின் புகழும் அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் இவர்களுக்கு வெற்றி கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல சூழல் உருவாகும்.


 


மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ