குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் உண்டாகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இது பாதகமான பலன்களைத் தரும். குரு சண்டள யோகம்  சாதகமாக இருந்தால் ஒவ்வொரு செயலிலும் வெற்றி வந்து சேரும். ஜாதகத்தில் வெவ்வேறு வீடுகளில் இருக்கும் நிலையை பொறுத்து, குரு சாண்டள யோகம் பலவிதங்களில் பலன்களைத் தருகிறது. ஜாதகத்தில் ராகுவை விட வியாழனின் நிலை வலுவாக இருந்தால், இந்த யோகம் பலவீனமாக இருக்கும், எனவே அதன் பாதிப்புகளும் குறைவாக இருக்கும். மாறாக ஜாதகத்தில் சண்டள யோகம் பலமாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு - சண்டாள யோகம், அசுப யோகமாக இருந்தால், வாழ்க்கையில் பல வகையான சிரமங்களை ஏற்படுத்துகிறது. ஜாதகத்தில் குரு சண்டாள தோஷம் அமைந்தால் அந்த நபருக்கு எந்த வேலையிலும் வெற்றி கிடைக்காது. அவனது முயற்சிகள் அனைத்தும் வீண். அப்படிப்பட்டவர்கள் தேவையில்லாமல் சில சட்டச் சிக்கலில் சிக்கி பணம்,  மதிப்பு ஆகியவற்றை இழக்க நேரிடும். திருமண வாழ்க்கையும் நன்றாக இருக்காது. வேலை, வியாபாரம் என அனைத்திலும், நஷ்டம் ஏற்படுகிறது அல்லது வேலை அடிக்கடி பறி போகும் நிலை உண்டாகும். இதன் காரணமாக, ஒரு நபர் தனது வேலையை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். குரு, ராகு மற்றும் கேதுவின் சேர்க்கையால்  ஏற்படும் குரு சண்டாள தோஷத்தின் தோஷத்தின் பாதிப்பு என்ன, அதை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க| அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 


ஜாதகத்தின் முதல் வீட்டில் வியாழனும் ராகுவும் ஒன்றாக அமர்ந்திருந்தால், அந்த மனிதனுக்கு சந்தேகப்படும் தன்மை உண்டாகிறது. இதனுடன், அந்த நபர் சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பதில் ஈடுபடும் வாய்ப்பும் அதிகம் ஏற்படுகிறது. 


ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் குரு சண்டாள யோகம் அமைந்தால், அந்த நபர் செல்வந்தராக இருப்பார். ஆனால் மகிழ்ச்சிக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் பணத்தை செலவிடுபவராக இருப்பார். இது தவிர, குரு பலவீனமானமாக, இருப்பதால் நபர் போதைக்கு அடிமையாகவராக இருப்பார்.


ஜாதகத்தின் மூன்றாவது வீட்டில் குருவும் ராகுவும் சந்திப்பதால், ஒரு நபர் வலிமையும் தைரியமும் கொண்டவராகவும் இருக்கிறார். ஆனால் தவறான செயல்களில் பெயர் போனவராக இருப்பார். மேலும், அந்த நபர் பந்தயம், சூதாட்டம் போன்றவற்றின் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிப்பவராக இருப்பார்.


குரு சண்டாள தோஷம் நீங்க, குரு மற்றும் ராகு சாந்தி பாராயணம் செய்ய வேண்டும். இது தவிர, பெற்றோருக்கு சேவை செய்ய வேண்டும். வீட்டில் அல்லது கோவிலில் விஷ்ணுவை வழிபடுவது குரு சண்டாள தோஷத்தின் எதிர்மறை விளைவுகளை குறைக்கிறது. திங்கட்கிழமை இரண்டு முகம் ருத்ராட்சம் அணிவதும் நன்மை தரும். மேலும் விநாயகப் பெருமானை தொடர்ந்து வழிபடுவதால் குரு சண்டாள தோஷம் நீங்கும். குரு மந்திரம் 'ஓம் ப்ரம் பிரிம் ப்ரௌன் சஹ குர்வே நமஹ' என்ற மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும். வீட்டில் வாழை கன்றை நட்டு தினமும் வழிபடுவது சண்டள யோகத்தில் இருந்து நிவாரணம் பெற மிகவும் சிறந்த வழியாகும். இது தவிர ராகு மந்திரங்களை தொடர்ந்து உச்சரிக்கவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ