குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்!

Jupiter Transit: கடவுள்களின் குருவாகக் கருதப்படும் வியாழன் எனப்படும் குரு பகவான், நவம்பர் 24-ஆம் தேதி தனது நிலையை மாற்றிக் கொள்ளப் போகிறார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 7, 2022, 06:22 AM IST
  • பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • பணியிடத்தில் போனஸ் பெறலாம்.
  • வியாபாரம் தொடர்பாக சிறிய அளவில் அல்லது பெரிய அளவிலான பயணங்களை மேற்கொள்ளலாம்.
குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! title=

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நிலை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்றொரு ராசியில் பெயர்ச்சி ஆகிறது. அதன் ராசி மாற்றத்தின் காரணமாக, சிலருக்கு அதிர்ஷ்ட காற்று வீசும், சிலர் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். கடவுள்களின் குருவாகக் கருதப்படும் வியாழன் எனப்படும் குரு பகவான், நவம்பர் 24-ஆம் தேதி தனது நிலையை மாற்றிக் கொள்ளப் போகிறார். வியாழன் கிரகம் ஜூலை 29 அன்று வியாழன் மீனத்தில் வக்ர பெயர்ச்சி ஆன நிலையில், இப்போது, நவம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 4:35 மணிக்கு குரு பகவான் தனது நிலையை மாற்றிக் கொள்கிறார். இதனால் பஞ்சமஹாபுருஷ ராஜ யோகம் உருவாகிறது. இதனால், 3 ராசிக்காரர்கள், தங்கள் வேலையிலும் தொழிலிலும் வெற்றியும், பணவரவும் பெறப் போகிறார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.

பணியிடத்தில் வருமானம் அதிகரிக்கும்

கடகம்: வியாழனின் இந்த ராசி மாற்றத்தினால்,கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்ட காற்று வீசும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பின் காரணமாக அங்கீகாரம் கிடைத்து பண வரவு அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பாக சிறிய அளவில் அல்லது பெரிய அளவிலான பயணங்களை மேற்கொள்ளலாம். வெளிநாட்டில் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் அதில் வெற்றி பெறலாம். தடைபட்ட உங்களின் பல வேலைகள் நிறைவடையும்.

புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்

மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி,  காரணமாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் போனஸ் பெறலாம். வியாபாரத்தில் லாபம் மற்றும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், அதனால் மன அமைதி கிடைக்கும்.

மேலும் படிக்க| அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 

புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்

ரிஷபம்: வியாழன் கிரகம்  சஞ்சாரத்தால் இந்த ராசிக்கு மீண்டும் அதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது. அவர்களின் வருமானம் அதிகரித்து, புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீங்கள் ஏதேனும் வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். உங்கள் நிதி நிலை மேம்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் துறையுடன் தொடர்புடையவர்கள் பணி நிமித்தமாக பயணம் செய்வதற்கான வாய்ப்பைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News