தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, நிம்மதியான வாழ்வைத் தரும் பிரதோஷ வழிபாடு
பிரதோஷ நாளில் சிவ பெருமானை பிரார்த்தனை செய்தால், சிக்கல்களும், இன்னல்களும் தீரும். கஷ்டங்களும், கவலைகளும் காணாமல் போகும் என்பது உறுதி.
பிரதோஷம் என்பது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு மிகவும் உகந்த நாள். கிருஷ்ண பக்ஷம் மற்றும் சுக்ல பக்ஷத்தின், திரயோதசி திதி அன்று பிரதோஷ விரதம் அனுசரிக்கப்படுகிறது. சிவாலயங்களில், பிரதோஷ பூஜை சிறப்புறக் கொண்டாடப்படுவது வழக்கம். பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவ பெருமானுக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் ஆகியவை விமரிசையாக நடைபெறும்.பிரதோஷ நாளில் சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது.
பிரதோஷ நாளில் சிவலிங்கத்திற்கு வெள்ளி தாமரையில் அர்ச்சனை செய்து, பால் அபிஷேகம் செய்யுங்கள். மேலும், சிவாலயம் செல்வதன் மூலம் வாழ்க்கையில் இழந்தவற்றை திரும்ப பெற சிவபெருமான் அருளுவார் என்பது நம்பிக்கை.இதில் பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 மணி வரைஎல்லா சிவன் கோயிலிலும் சிவலிங்கத்திற்கு, நந்திதேவருக்கும் 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இந்த அபிஷேக ஆராதனையை தரிசித்தாலே, வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் விலகும்; தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோஷ நாளில் காலையும், மாலையும் சிவ பெருமானை வழிபடுங்கள். அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையை தரிசியுங்கள். இதனால் வாழ்க்கையின் அனைத்து வளங்களையும் பெற்றும் நிம்மதியாக வாழலாம்.
மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்
பிரதோஷ தினத்தன்று நந்திதேவருக்கு அருகம்புல்லும், சிவபெருமானுக்கு வில்வமும் சாற்றி பிரார்த்தனை செய்தால், சிக்கல்களும், இன்னல்களும் தீரும். கஷ்டங்களும், கவலைகளும் காணாமல் போகும் என்பது உறுதி. பிரதோஷ விரதமும் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது. இந்த நாளில், சிவ பெருமானுக்கு செய்யும் சிறப்பு வழிபாடும், பூஜையும் சந்திர தோஷத்தில் இருந்து உங்களை நீக்கு. அதோடு பல வகையான கிரக தோஷங்களின் தாக்கங்களும் வெகுவாக கு
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ