இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும்

Rahu Nakshatra Parivartan 2022: பொதுவாக ராகுவின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சமீபத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ராகு தனது ராசியை மாற்றி மேஷ ராசியில் பிரவேசித்து தற்போது ஜூன் 14ம் தேதி ராகு மீண்டும் ராசியை மாற்றப் போகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 7, 2022, 01:18 PM IST
  • பரணி நட்சத்திரம் மங்களகரமானதாக கருதப்படுகிறது
  • ராகு கேது பெயர்ச்சி
  • 3 ராசிக்காரர்களுக்கு பலத்த அதிர்ஷ்டத்தை தருவார்
இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும் title=

ராகு ​பெயர்ச்சி 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் அதன் நிலையை மாற்றும் போது, ​​அதன் தாக்கம் 12 ராசிகளின் வாழ்க்கையில் காணப்படுகிறது. இந்த விளைவு சிலருக்கு நல்லதாகவும் சிலருக்கு பாதகமாகவும் இருக்கும். 

ஜோதிடத்தில் ராகு ஒரு பாவ கிரகமாக கருதப்படுகிறது. ராகு-கேதுவை நிழல் கிரகங்கள் என்றும் அழைப்பர். யாருக்கு ராகு-கேது தோஷம் ஏற்படுகிறதோ, அவருடைய வாழ்க்கையே பாழாகிவிடும். ஜூன் 14-ம் தேதி ராகு கிரகம் மாறப் போகிறது. தற்போது ராகு மேஷம் மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கிறார். 8 நாட்களுக்குப் பிறகு ராகு பரணி நட்சத்திரத்தில் நுழைவார். அடுத்த வருடம் 2023 பிப்ரவரி 20 வரை இந்த ராசியில் ராகு இருப்பார். இது எல்லா ராசிக்காரர்களையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடும்.

மேலும் படிக்க | விரைவில் சனி தசை; சனிபகவானின் பிடியில் இந்த 2 ராசியினர் சிக்குவார்கள் 

பரணி நட்சத்திரம் மங்களகரமானதாக கருதப்படுகிறது
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ராசி மேஷம். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் கிரகம் மற்றும் இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். அத்தகைய சூழ்நிலையில், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய இருவராலும் பாதிக்கப்படுகிறார். இதன் காரணமாக, இந்த மக்கள் தைரியமானவர்கள், அச்சமற்றவர்கள், மகிழ்ச்சிக்காக ஏங்குபவர்கள், வார்த்தைகளில் உறுதியானவர்கள் மற்றும் கவர்ச்சிகரமானவர்கள்.

பரணி நட்சத்திரத்தின் ராகு 3 ராசிக்காரர்களுக்கு பலத்த அதிர்ஷ்டத்தை தருவார்
பரணி நட்சத்திரத்தில் ராகு நுழைவதும், அடுத்த 8 மாதங்கள் இந்த நட்சத்திரத்தில் இருப்பதும் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். இதன் போது பணம், முன்னேற்றம் ஏற்படும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்-

மேஷம்: ராகுவின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி நிலை ஆகியவற்றில் நன்மைகளைத் தரும். முன்னேற்றம் அடையலாம். வருமானம் அதிகரிக்கும். சிக்கிய பணம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்: பரணி நட்சத்திரத்தில் ராகு நுழைவதால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செல்வச் செழிப்பு உண்டாகும். பல லாப வாய்ப்புகளைப் பெறுவார்கள். உங்கள் தொழிலில் வேகமாக முன்னேறுவீர்கள். பதவி உயர்வு உண்டாகும். பயணங்களால் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள்.

துலாம்: ராகுவின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் பல நன்மைகளை தரும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வாழ்வில் வசதிகள் பெருகும். நீங்கள் ஒரு பயணம் மேற்கொள்ளலாம். மகிழ்ச்சியான நேரங்கள் கடந்து போகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அக்டோபர் 23 வரை சனி வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News