Astro: அக்டோபர் 10 வரை இந்த `4` ராசிகளின் காட்டில் அதிர்ஷ்ட மழை!
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிகளுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலனும் கிடைக்கும். ஒரு நபரின் ஜாதகம் கிரகங்களின் இயக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. கிரகங்களின் சஞ்சாரம் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 10-ம் தேதி வரை உள்ள நேரம் அனுகூலமாக இருப்பதால் , அவர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள் என கூறப்படுகிறது. அக்டோபர் 10-ம் தேதி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
இந்த ராசிகளுக்கு மிகவும் அனுகூலமான காலம் இது. தொழில் விரிவாக்கத் திட்டம் நிறைவேறும். சகோதரர்களின் ஒத்துழைப்பு இருக்கும். ஆனால் கடின உழைப்பு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். ஆடைகள் போன்ற பரிசுகளையும் பெறலாம். வேலை மாற்றத்தால், நீங்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் கிடைக்கும். தாயின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகன யோகம் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.
மேலும் படிக்க | ASTRO Traits: காதல் துணையை உண்மையாக நேசிக்கும் ‘5’ ராசிகள்..
விருச்சிகம்
விருச்சிக ராசிகள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். குடும்பத்தில் சுகபோகங்கள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பணியிட மாற்றம் சாத்தியமாகும். தாயாரின் ஆதரவையும் அன்பையும் பெறுவீர்கள். தொழிலில் லாபம் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
தனுசு
தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். படிப்பில் ஆர்வம் இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு, வேறு இடத்திற்கு மாற வேண்டி வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் வரப்பிரசாதமாக அமையப் போகிறது.
மேலும் படிக்க | Astro Traits : பேச்சுத்திறனால் காரியத்தை சாதித்துக் கொள்ளும் ‘5’ ராசிகள்!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ