ASTRO Traits: காதல் துணையை உண்மையாக நேசிக்கும் ‘5’ ராசிகள்..!

Astro Traits : ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் இருக்கும் குணதிசயங்களை பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 26, 2022, 02:05 PM IST
  • தங்கள் வாழ்க்கை துணையை உண்மையாகவே நேசிப்பாவர்களாக இருப்பார்கள்.
  • அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற முயற்சி செய்வார்கள்.
  • எப்போதும் தங்கள் துணையை மகிழ்ச்சியாக பார்க்கவே விரும்புவார்கள்.
ASTRO Traits: காதல் துணையை உண்மையாக நேசிக்கும் ‘5’ ராசிகள்..! title=

Astro Traits: ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் இருக்கும் குணதிசயங்களை பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில ராசிக்காரர்கள் உறவுகளைப் பேணுவதில் நேர்மையானவர்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில ராசிக்காரர்கள், அனைத்து விதமான சூழ்நிலையிலும், வாழ்க்கை துணைக்கு விசுவாசமாகவும் நேர்மையாகவும் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள் தங்கள் காதல் துணையை மிகவும் மதித்து நடப்பார்கள். மேலும் அவர்களுக்கு ஒரு வலுவான அரணைப் போல் இருப்பார்கள். வாழ்க்கை துணையின் அனைத்து விருப்பங்களை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள். தங்கள் துணைக்கு மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். உங்கள் வாழ்க்கை துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்கள் அனைவருடன் பணிவுடன் பழகுவார். இவர்கள் உறவுகள் எல்லோரிடமும் நேர்மையாகவே பழகுவார்கள். அதிலும் வாழ்க்கைத் துணையை ஏமாற்றும் எண்ணம் இவர்களுக்கு கனவில் கூட வராது . இந்த ராசிக்காரர்களை தங்கள் வாழ்க்கைத் துணையாக அடைவது பெரும் அதிர்ஷ்டம் எனலாம். தனது துணையின் முகத்தின் எப்போதும் சிரிப்பை மட்டுமே பார்க்க விரும்புபவர்கள் இந்த ராசிக்காரர்கள். 

மேலும் படிக்க | Astro Traits : பேச்சுத்திறனால் காரியத்தை சாதித்துக் கொள்ளும் ‘5’ ராசிகள்!

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை விட்டு விலக மாட்டார்கள் என்பதோடு மிகவும் நேர்மையாக இருப்பார்கள். இது தவிர, இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக இருப்பார்கள்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையானவர்கள். தங்கள் வாழ்க்கை துணையை என்றென்றும் நேசிப்பவர்களாகவும் பாதுக்காப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் ஒரு போதும் தங்கள் துணையை ஒரு போதும் ஏமாற்ற மாட்டார்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் உறவுகளை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை துணையை உண்மையாகவே நேசிப்பாவர்களாக இருப்பார்கள். அவர்களை அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற முயற்சி செய்வார்கள். மேலும், அவர்கள் எப்போதும் தங்கள் துணையை மகிழ்ச்சியாக பார்க்கவே விரும்புவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News