செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை செப்டம்பர் 9 முதல், செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை வரையிலான ஏழு நாட்களுக்கான ராசிபலன்கள் இவை...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் 


மேஷ ராசிக்காரர்களுக்கு பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும் என்றாலும், பணம் வரவு செலவில் கவனமாக இருக்கவும்.


ரிஷபம் 


சக ஊழியர்களிடம் இருந்து ஆறுதல் கிடைக்கும். அலுவலகத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் நெருக்கடிகளில் இருந்து வெளிவரலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம், பயணங்களின் மூலம் புதிய அனுபவம் என வாழ்க்கை பரபரப்பாக செல்லும்.


மிதுனம் 


உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியான தருணங்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு வாய்க்கும். குடும்பத்திலும், உடன்பிறந்தவர்களிடமும் அனுசரித்துச் செல்லவும். விளையாட்டு சார்ந்த விஷயங்கள் அசதியைக் கொடுக்கும்.


கடகம்
அரசு தொடர்பான வேலைகள் சட்டென்று முடியும், அனுகூலம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த விருப்பு விலகும். பொறுமையுடன் செயல்படுவது நல்லது. 


சிம்மம்
புதிய முயற்சியால் முடிவுகள் சாதகமாக இருக்கும். வேலை செய்யும் பாணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பத்திரம் தொடர்பான பணிகள் முடிவடையும். சுபகாரிய எண்ணங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும், குடும்பத்தினர் அன்பாக இருப்பார்கள். 


மேலும் படிக்க | இந்த வார ராசிபலன்: செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 15 2024 வரை, முழு ராசிபலன்


கன்னி
நண்பர்களுடன் உணவு உண்ணும்போது சற்று கவனம் வேண்டும். மனதில் புதிய இலக்குகள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் நெருக்கடியை சமாளிக்க உதவும்.


துலாம்
பொறுமையை கடைபிடிக்கவும். வேலைகளில் இருந்துவந்த மந்தத்தன்மை இந்த வாரம் விலகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். 


விருச்சிகம் 
வியாபாரத்தில் போட்டிகள் மேம்படும். குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள்.  


தனுசு
பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்கள் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பாக அமையும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.


மேலும் படிக்க | எத்தனைவித சனி பாதிப்புகள்? கண்டச்சனி முதல் ஏழரை வரை ஏழரையை கூட்டும் சனீஸ்வரரின் பார்வை பலன்கள்!


மகரம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும், கடுமையான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். இறை விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். காப்பீடு செயல்களில் சிந்தித்துச் செயல்படவும்.  


கும்பம் 
உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பம் சார்ந்த பிரச்சனைகள் விலகும். வாக்குறுதி அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். திடீர் பயணங்களால் சில மாற்றங்கள் ஏற்படும்.


மீனம் 
மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் ஏற்பட்டு நீங்கும்.


மேலும் படிக்க | கோலாகலமாக கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியே உங்களை கோடீஸ்வரராக்கும்! எப்படி? இப்படித்தான்... 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ