Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்
வாழ்க்கையின் சந்தோஷத்தையும் நிம்மதியையும் குலைக்கும் கடன் தொல்லை என்பது நம் காலை சுற்றிய பாம்பைப் போல, தீராத மன கலக்கத்தை கொடுக்கக் கூடியது.
கம்பராமாயணத்தில், இராவணனின் மனக் கலக்கத்தை பற்றி குறிப்பிடுகையில், ‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என கம்பர் உவமையாக கூறியிருப்பார். கடன் தொல்லை என்பது எந்த அளவிற்கு நிம்மதியை தொலைத்து விடும் என்பதற்கு இந்த உவமை மிகச் சரியாக பொருந்தும். காலைச் சுற்றிய பாம்பைப் போல் இருக்கும் கடன் தொல்லை என்பது நடுத்தர வர்கத்தினர் மட்டுமல்லாது மேல்தட்டு மக்களுக்கும் உள்ள ஒரு சர்வ சாதாரணமான பிரச்சினையாகும். சிலர், குழந்தைகளின் கல்வி, திருமணம், முன்னேற்றம் போன்ற அவசியமான காரணத்திற்காக கடன் வாங்குவார்கள். சிலர் ஆடம்பர தேவைகளுக்காக கடன் வாங்குவார்கள்.
பல சமயங்களில், வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல துன்பங்களுக்கு கடன் தொல்லை தான் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. குடும்பத்தில் நிம்மதி குறைதல், மனக்கலக்கம் ஆகியவை ஏற்பட்டு வாழ்க்கையில் நிம்மதியை தொலைத்து விடுகிறோம். குல தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள், பித்ருக்களுக்கான திவசம் போன்றவற்றை ஒழுங்காக செய்யாதவர்கள் ஆகியோர்களுக்கு கடன் தொல்லை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | ரிஷப ராசியில் வக்ர நிலையில் நுழையும் புதன்; இந்த ராசிகளின் தலைவிதி மாறும்
கடன் தொல்லைகளிலிருந்து விடுபட, கடன் நிவர்த்தி திருத்தலம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்திலிருந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சேறை உடையார் கோவில் சென்று கடன் நிவர்தீஸ்வரர் என அழைக்கப்படும் ருண விமோசன லிங்கேஸ்வரரை வழிபடுவது சிறந்த பலனை அளிக்கும். தீராத கடன்கள் தீர்ந்து வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.
பிரதோஷ காலத்தில், சிவபெருமானை வணங்குவதன் மூலமும், தொல்லையிலிருந்து விடுபடலாம். அதுவும் செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம், கடன் விமோசன பிரதோஷம் என கூறப்படுகிறது. எனவே பிரதோஷ காலத்தில், குறிப்பாக செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷத்தில், அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவதும், சிவபூஜை செய்வதும், கடன் தொல்லை நீங்கி, நிம்மதியான வாழ்வு பெற உதவும்.
அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு, பிரதோஷ காலத்தில் பசும்பால் அல்லது இளநீரால் அபிஷேகம் செய்யலாம். இந்நாளில் நந்தி பெருமானை வணங்கி, அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபடுவதன் மூலமும் கடன் தொல்லை மட்டுமல்ல, அனைத்து விதமான தோஷங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.
சிவபெருமானின் அருளோடு சனிபகவானின் அருளும் சேர்ந்தால் கடலில் இருந்து விடுபடுவது எளிதாகும். சனி பகவானின் திருத் தலங்களான திருநள்ளாறு, சென்னையிலுள்ள வடதிருநள்ளாறு, ஆகிய தலங்களுக்கு செல்வதும் கடன் தொல்லையில் இருந்து விமோசனம் கிடைக்கும்.
மேலும் படிக்க | குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR