இன்றைய தினம் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றிய குறிப்புகளைத் தெரிந்து கொண்டு இன்றைய நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும். மகாசிவராத்திரி நாளான இன்று சிவபெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது நல்லது... இன்றைய தினம் மார்ச் 8, உலகம் முழுவதும் மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.  இன்று சோபகிருது ஆண்டு, மாசி மாதம் 24ம் நாள் ராசிபலன்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

08-03-2024 மஹாசிவராத்திரி ராசிப்பலன்


மேஷம்


ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் புரிதல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அகலும். இருக்கும். வெளியூர் பயணங்களினால் ஆதாயம் உண்டாகும். 


ரிஷபம்


சக ஊழியர்களிடம் நம்பிக்கை கிடைக்கும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். விழிப்புடன் வேலையைக் கையாளுங்கள். விழிப்புடன் வேலை செய்யுங்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். றவினர்களின் வழியில் அனுகூலமான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும், சேமிப்பு அதிகரிக்கும்.


மிதுனம்


சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். எதையும் சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். குடும்பத்தின் ஆதரவு அவசியம் என்பதை புரிந்து நடந்துக் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | ராகு-கேது அருளால்.... இந்த ராசிகளில் வாழ்க்கையில் குறைகள் இருக்காது..!


கடகம்


பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை காட்டுவது நல்லது, பணிபுரியும் இடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் நலனை பாதுக்காக்கவும். விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று.   


சிம்மம்


கலைத்துறையில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.  தொழில் ரீதியாக எதிர்பார்த்த பண உதவி கிட்டும்


கன்னி


புதிய நம்பிக்கை பிறக்கும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். தகவல் தொடர்பை வலுப்படுத்திக் கொள்வது நல்லது.


மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் சித்திரையில் ராஜ யோகத்தை அனுபவிக்க உள்ள ‘6’ ராசிகள்!


துலாம்


உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கல்வியில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கால்நடை வளர்ப்பு பற்றிய புரிதல் அதிகரிக்கும். சேமிப்பு சார்ந்த ஆலோசனை கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கும். 


விருச்சிகம்


பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கல்வி விஷயத்தில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது


தனுசு


பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் சேமிப்பு குறையும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பாக பிரிவினைகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். 


மேலும் படிக்க | 15 நாட்களுக்குள் இரு கிரகணங்களின் பெயர்ச்சி! ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்!


மகரம்


இன்று ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது. அத்தியாவசியப் பணிகளில் கவனம் செலுத்துவார்கள். நட்பு ஆதரவாக இருக்கும். பரிவர்த்தனைகள் தெளிவாக இருக்கும்.


கும்பம்


சுபகாரிய முயற்சிகள் தொடங்க நல்ல நாள். கூட்டாளிகளின் வழியில் ஆதரவு ஏற்படும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும்


மீனம்


உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். 


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | மகா சிவராத்திரி முதல் மாறும் வாழ்க்கை: சிவனும் சனியும் இணைந்து அருள் பொழிவார்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ