இன்றைய ராசிபலன்: புரட்டாசி முதல் வெள்ளியன்று விஷ்ணுபத்னியின் ஆசி பெறும் ராசிகள்
Daily Rasipalan: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? 2023 செப்டம்பர் 22ம் நாளுக்கான ஜோதிடக் கணிப்பைக் தெரிந்துக் கொள்வோம்...
புதுடெல்லி: ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் ராசிகளின் இயக்கத்தின்படி, ஒருவரின் பலாபலன்கள் சொல்லப்படுகின்றன. இன்று நமக்குக் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும். இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா இல்லை எச்சரிக்கையாக இருப்பது நல்லதா? தெரிந்துக் கொள்வோம்...
மேஷம்
உடன்பிறந்தவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஒப்பந்தப் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.
ரிஷபம்
மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும்.
மிதுனம்
சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். செய்கின்ற முயற்சிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் சாதகமாக அமையும். நீண்ட நாள் கவலைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். சுபகாரிய செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும்.
மேலும் படிக்க | சர்வார்த்த சித்தி யோகத்தினால் பம்பர் பலன்களை அள்ளப் போகும் ‘5’ ராசிகள்!
கடகம்
எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கடக ராசிக்காரர்களுக்கு அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.
சிம்மம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்குத் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பீர்கள். சுகம் நிறைந்த நாள்.
கன்னி
தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சிறு தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் திருப்தியான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிவீர்கள்.
துலாம்
பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். மனை தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள்.
மேலும் படிக்க | வேலை, வியாபாரத்தில் வெற்றி: புதன் உதயத்தால் இந்த ராசிகளுக்கு லாபமோ லாபம்
விருச்சிகம்
புதிய நபர்களின் நட்பு மற்றும் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது. செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும்.
தனுசு
முன்கோபத்தால் சிலரின் நட்புகளை இழப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உணர்வுப்பூர்வமாகப் பேசுவதை விட சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும்.
மகரம்
செயல்படுத்தும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். மகர ராசியினருக்குபெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார ரீதியான பணிகளில் லாபம் மேம்படும். பேச்சுக்களில் பொறுமையைக் கையாளவும். வழக்கு பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும்.
கும்பம்
வியாபாரத்தில் கொள்முதல் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.
மீனம்
கலைநயம் மிகுந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். குடும்ப பெரியவர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.
மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி.. ராஜவாழ்க்கை அமையும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ