கவர்ச்சிகரமாக மாறுவது எப்படி..? ‘இந்த’ 5 ராசிக்காரர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்..!
Attractive Zodiac Signs In Tamil: இருக்கும் 12 ராசிகளுள் அனைவரும் கவர்ச்சிகரமானவர்களே. ஆனாலும், குறிப்பிட்ட சில ரசிகளால் மட்டும் பலர் காந்தம் போல ஈர்க்கப்படுவர். யார் அவர்கள்?
ஜோதிடத்தை பொறுத்தவரை ஒவ்வொருவரின் குணாதிசயங்களும், பன்புகளும் அவர்களின் நட்சத்திர அமைப்புடன் தொடர்புடைபவையாக உள்ளன. ஒரு சில ராசிக்காரர்களுக்கு பலரை காந்தம் போல ஈர்க்கும் கவர்ச்சிகரமான வசீகரம் இருக்கும். அப்படி அசாத்தியமான குண நலனை கொண்டுள்ள ராசிக்காரர்கள் யார் யார்? இதோ விவரம்.
1.துலாம்:
சனி கிரகத்தால் ஆட்சி செய்யப்படும் ராசியை சேர்ந்தவர்கள், துலாம் ராசிக்காரர்கள். இவர்களிடம் இருக்கும் வசீகரத்தை யாராலும் கண்டுகொள்ளமால் இருக்க முடியாது. இவர்கல் நடந்து கொள்ளும் விதம், உள்ளுணர்வுகள் உள்ளிட்ட விஷயங்கள் பலரை ஈர்க்கும் தன்மை கொண்டது. தன்னை சுற்றி இருப்பவர்களையும் சிறப்பானவர்களாக உணர வைப்பதில் கைதேர்ந்தவர்கள் இவர்கள். அதனாலேயே, இவர்களுடன் இருப்பவர்களுக்கு இவர்கள் தனித்துவமாக தெரிவர்.
2.சிம்மம்:
சூர்யனால் ஆட்சி செய்யப்படும் ராசிகளுள் சிம்ம ராசியும் ஒன்று. அந்த சூரியனை போலவே இவர்களும் பிரகாசமாக ஜொலிக்கும் திறனை உடையவர்கள். இவர்களின் தன்னம்பிக்கை மற்றும் வெளிப்படையாக நடந்து கொள்ளும் இயல்பு பலரை ஈர்க்கவல்லது. இவர்கள் இருக்கும் இடம், தனியாக தெரியும், காரணம், இவர்கள் தன்னை மட்டுமன்றி தன்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வர்.
3.விருச்சிகம்:
எப்போதும் ஏதோ மர்மம் நிறைந்திருப்பது போன்ற குணாதிசயம் கொண்டவர்கள், விருச்சிக ராசிக்காரர்கள். இந்த பண்பு, பலருக்கு இவர்கள் குறித்த ஆர்வத்தை தூண்டும். இவர்களுடன் பழகி பார்த்த பின்பும் இவர் எப்படிப்பட்டவர் என்பதையும் பலரால் கண்டுபிடிக்க முடியாமல் போகும். அதனால், இவருடன் பேச விரும்புபவர்கள், முதல் நாளில் எந்த ஆர்வத்துடன் பேச வருகிறார்களோ, அதே போல கடைசி வரை இருப்பர். அது மட்டுமன்றி, தன்னை நம்பி ஒருவர் ஏதாவது ரகசியத்தை கூறினாலும் அதை பத்திரமாக பாதுகாப்பர். இவர்களின் இந்த புதிரான குணாதிசயமே பலரை வசீகரிக்கும்.
மேலும் படிக்க | 1 ஆண்டுக்கு பிறகு கன்னியில் சூரியன்.. இந்த ராசிகளுக்கு பண மழை
4.மீனம்:
மீன ராசிக்காரர்கள் எளிதில் அனைவரையும் புரிந்து கொள்ளும் குணாதிசயத்தை கொண்டிருப்பர். அது மட்டுமன்றி, இவர்கள் மிகுந்த படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பர். தன்னை சுற்றி இருப்பவர்களை புரிந்து கொள்வதிலும், அவர்களை பாராட்டுவதிலும் அவர்களுடன் உணர்வு ரீதியான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் இவர்கள் தயங்க மாட்டார்கள். இதனாலேயே மீன ராசி உடையோரை பலருக்கும் பிடிக்கும். இதுவே ஒரு புதிவித வசீகரத்தையும் உண்டாக்கும்.
5.மிதுனம்:
இயல்பாகவே நகைச்சுவை திறன் மிக்கவராக இருப்பவர்கள், மிதுன ராசிக்காரர்கள். இவர்களுக்கு பிறரிடம் பேசுவதிலோ அல்லது அவருடன் உணர்வு ரீதியான தொடர்பை ஏற்படுத்தி கொள்வதிலோ எந்த பிரச்சனையும் இருக்காது. எந்த இடத்திற்கு சென்றாலும், அந்த இடம் எவ்வளவு வித்தியாசமாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல தன்னை சட்டென மாற்றிக்கொள்ளும் திறனும் இவர்களுக்குள் இருக்கும். இவர்கள், எந்த விஷயம் தெரிந்தாலும் அதை பலரிடம் பகிர்ந்து கொள்வர். தெரியாத விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்வர். இப்படி, ஆர்வமுடன் இருக்கும் இவர்களின் குணாதிசயம் பலரையும் வசீகரிக்கும்.
மேலும் படிக்க | இரவில் தூக்கமே வரவில்லையா... ஜாதகத்தில் இந்த பிரச்னை இருக்கலாம் - பரிகாரங்கள் இதோ!
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ