வக்ர நிலையில் சனி, ராகு, கேது: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் அமோக வெற்றி, பண வரவு
Shani, Rahu, Ketu Vakri: சில ராசிக்காரர்களுக்கு இந்த 3 கிரகங்களின் வக்ர பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அள்ளித் தரும்.
சனி, ராகு, கேதுவின் வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில், சனி மற்றும் ராகு-கேது கிரகங்களின் வக்ர இயக்கம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த கிரகங்களின் தலைகீழ் இயக்கம் மக்களின் வாழ்க்கையில் எழுச்சிகளை உருவாக்குகிறது. சனி ஜூன் 17 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடைந்தார். மறுபுறம், ராகு மற்றும் கேது கிரகங்கள் எப்போதும் வக்ர நிலையிலேயே சஞ்சாரம் செய்கின்றன.
இந்த நிலையில், தற்போது மூன்று முக்கியமாக கிரகங்கள் வக்ர இயக்கத்தில் உள்ளன. 2023 நவம்பர் 4 ஆம் தேதி வரை சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் இருப்பார். 30 அக்டோபர் 2023 வரை ராகுவும் கேதுவும் இந்த நிலையில் இருப்பார்கள். தற்போது ராகு மேஷ ராசியிலும், கேது ரிஷப ராசியிலும் உள்ளனர். அக்டோபர் 30 ஆம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடக்கவுள்ளது. ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் அப்போது பெயர்ச்சியாவார்கள். ஆனால் அதற்கு முன் அக்டோபர் 30 வரை சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி, ராகு மற்றும் கேதுவின் வக்ர இயக்கத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த 3 கிரகங்களின் வக்ர பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அள்ளித் தரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுன ராசி:
சனி, ராகு மற்றும் கேதுவின் வக்ர இயக்கம் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக நற்பலன்களை அள்ளித்தரும். இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கலாம். வருமானமும் அதிகரிக்கும். உங்கள் நிதி பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு நிலையான தொகையைப் பெறுவீர்கள். இந்த காலத்தில் மன அழுத்தம் குறைவாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருப்பீர்கள். இதனுடன், உங்கள் முன்னேற்றத்திலும் நீங்கள் திருப்தி அடைவீர்கள். இது முதலீட்டுக்கு ஏற்ற நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மேலும் படிக்க | வக்ர நிலையில் உள்ள சனி ‘இந்த’ ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார்!
துலா ராசி:
துலா ராசிக்காரர்களுக்கு சனி, ராகு மற்றும் கேது நல்ல பலன்களைத் தருவார்கள். பழைய பிரச்சனைகள் தீரும். உடல், மன உளைச்சல்கள் நீங்கும். பண ஆதாயம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை வலுப்பெறும். மேலும், நீண்ட நாட்களாக கையில் கிடைக்காமல் சிக்கி இருந்த பணம் இப்போது கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்கள் இப்போது புதிய தொழில்களயும் துவக்கலாம்.
மகர ராசி:
மகர ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி வரை சனியின் வக்ர இயக்கமும், ராகு கேதுவும் சாதகமான பலன்களைத் தரும். இந்த மூன்று கிரகங்களின் அருளால் மன உளைச்சல், கவலைகள் நீங்கும். பண பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த சம்பள உயர்வு இப்போது கிடைக்கலாம். உங்கள் வாழ்க்கை துணைக்கு நேரம் கொடுங்கள், அவரை நன்றாக நடத்துங்கள். இது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஒத்துழைப்பு இப்போது உங்களுக்கு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினசரி ராசிபலன் - இந்த 4 ராசிகளுக்கு பண மழை பொழியும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ