Budhan Peyarchi Palangal: ஜோதிடத்தில் ஏப்ரல் மாதம் மிகவும் முக்கியமான மாதமாக பார்க்கப்படுகின்றது. ஜோதிட கணக்கீடுகளின் படி இந்த மாதத்தில் பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றியுள்ளன. இன்னும் சில மாற்றங்களும் நடக்கவுள்ளன. பொதுவாக அனைத்து கிரகங்களும் ஒரு குறிபப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். இவற்றில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன் பெயர்ச்சியால் உருவான ராஜயோகங்கள்


ஜோதிடக் கணக்கீட்டின்படி ஏப்ரல் 9ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் மீன ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆனார். இதனுடன் மீனத்தில் 4 கிரகங்களின் சங்கமம் நடந்தது. ஏற்கனவே மீனத்தில் சூரியன், சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் உள்ளன. மீனத்தில் புதனும் பெயர்ச்சி ஆவதால், பல ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. ஜோதிட சாஸ்திரப்படி, மீனத்தில் லக்ஷ்மி நாராயண யோகமும், புதாதித்ய ராஜயோகமும் உருவாகியுள்ளன. புதன் பெயர்ச்சி மற்றும் இந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களது பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.  


1. மேஷம் (Aries)


புதன் பெயர்ச்சி மற்றும் கிரகங்களின் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் அபரிமிதமான பண பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வேலையில் இத்தனை நாட்களாக இருந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழிலதிபர்களுக்கும் இது நல்ல நேரமாக இருக்கும். பெரிய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். 


மேலும் படிக்க | ஏப்ரல் மாத பெயர்ச்சிகளால்.... இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்!


2. சிம்மம் (Leo)


புதன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றியை அள்ளிக்கொடுக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்போது புதிய ஆர்டர்கள் கிடைத்து, அதிக லாபம் கிடைக்கும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். முதலீடு செய்வதற்கு இது சரியான நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். பணி இடத்தில் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரிகள் பெரும் லாபம் பெறலாம். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும்.


3. கும்பம் (Aquarius)


கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி காலத்தில் பல நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். பொருளாதார நிலை முன்பை விட மேம்படும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ