மிதுன ராசியில் உச்சம் பெறும் செவ்வாய்.. இந்த ராசிகளுக்கு ராஜ ராஜ வாழ்க்கை
Mars Transit 2024 in Gemini: வேத ஜோதிடத்தின் படி, அடுத்த மாதம் செவ்வாய் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறது. இதன் காரணமாக எந்த ராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை அமையும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Mars Transit 2024 in Gemini: வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த கிரகப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுப பலனையும், அதேசமயம் சில ராசிக்காரர்களுக்கு தீய பலனையும் தரக்கக்கூடும். அந்த வகையில் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் மிதுன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். செவ்வாய் கிரகத்தின் இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். ஆனால் இந்த ராசி மாற்றம் குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த மூன்று ராசிக்காரர்கள் செல்வ செழிப்பையும், சொத்துக்களை பெறலாம். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்...
கடகம்: மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit 2024) கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். தொழிலதி செய்யும் கடக ராசிக்காரர்களுக்கு பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்யும் தொழிலின் மூலம் பல இடங்களில் இருந்து பாராட்டப்படுகளைப் பெறுவீர்கள். மேலும் சமூகத்தில் உங்களின் மரியாதையும் அந்தஸ்த்தும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் முழு ஆற்றாலுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் முழுமையான ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும்.
மேலும் படிக்க | உச்ச ஆட்டத்தில் குரு.. இந்த ராசிகளுக்கு ராஜதி ராஜ பொற்காலம், அதிர்ஷ்ட மழை
சிம்மம்: மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை தரும் பலன்களை மட்டுமே தரும். பணம் வரவு உங்களைத் தானாகவே தேடி வரும். உங்கள் நிதி நிலை முன்பை விட மேம்பட்டு சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். இதனால் ஆதாயம் கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் கைப்பற்றிக் கொள்ளுங்கள். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிறைந்திருக்கும்.
மகரம்: மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் நேர்மறை ஆற்றலுடன் இருப்பீர்கள். முழுமையான கவனத்தை வேலையில் செலுத்தவும். நம்பிக்கை அதிகரிக்கும். மத நிகழ்வுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் மற்றும் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை செய்துக் கொள்ளவும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ